ஜாலான் ராஜா தற்காலிக மூடப்படும். DBKL அறிவிப்பு
Kuala Lumpur City Hall (DBKL) will temporarily close a section of Jalan Raja from June 9-15, 2025.

Dated: 7.6.2025 Time: 4.22 By: Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
கோலாலம்பூர் மாநகர் மன்றம் (DBKL), மாநகரத்தின் வடிவமைப்புத் திட்டத்திற்காக வரும் ஜூன் 9 முதல் 15-ஆம் தேதி வரை ஜாலான் ராஜா-வின் ஒரு பகுதியை தற்காலிகமாக மூடவுள்ளது. இது மாநகர் மையத்தை வடிவமைக்கவும், பாதசாரிகளுக்கு குறிப்பாக, குடும்பங்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு பாதுகாப்பான இடத்தை உருவாக்கும் முயற்சியாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக DBKL தெரிவித்துள்ளது.
சுல்தான் அப்துல் சமாட் கட்டிடத்தின் முன்னால் உள்ள சாலைப் பகுதி - ஜாலான் துன் பேராக் இருந்து, ஜாலான் துவான்கு அப்துல் ரஹ்மான் சந்திப்பு வரை - இந்த தற்காலிக மூடல் இருக்கும்.
சாலைகளை பயன்படுத்துபவர்களின் கவனத்திற்காக, DBKL திசைகளுக்கான அடையாள பலகைகளை பொருத்தவுள்ளது.
பொதுப் போக்குவரத்து வழித்தடங்களும் பாதிக்கப்படும். GO-KL, RapidKL மற்றும் Hop On-Hop Off பேருந்து சேவைகளில் தற்காலிக மாற்றங்கள் ஏற்படும்.
டாத்தாரான் மெர்டேக்காவை அழகுமிக்க ஒரு வரலாற்றுத் தளமாக – சுற்றுலாத் தளமாக மேலும் புதுப்பிக்கவும், அப்பகுதியை கலை – கலாச்சாரம் – சமூக நடவடிக்கைகள் – உள்ளூர் வர்த்தகங்கள் – போன்றினை மேம்படுத்தவும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக DBKL கூறியுள்ளது.
நன்றி. எஃப்எம்டி.