AI குரல் மோசடி RM 5,000 வெள்ளி இழந்த பணிப்பெண்
A domestic worker in Malaysia lost RM5,000 after receiving a call mimicking her employer's voice using AI technology

Dated: 19.5.2025 - Time: 11.20 - By Punithai Chandran
AI குரல் மோசடி – மலேசியாவில் RM 5,000 ரிங்கிட் இழந்த பணிப்பெண்
இந்தக் காலத்தில் உங்களது சொந்த செவிகளையே நம்பு முடியவில்லை. சாதாரண பணிப்பெண் ஒருவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, அந்தப் பெண்ணின் தொலைபேசி அழைத்திருக்கிறது.
அந்தத் தொலைபேசி அழைப்பு சற்று மாறுபட்ட குரலில் பேசுவதுபோல் இருந்துள்ளது. இருந்தாலும் அதே குரல் - அதே உச்சரிப்பு எல்லாம் சரியான குரலாக இருந்துள்ளதால், அப்பணிப் பெண்ணும், அவளது முதலாளிதான் கூப்பிடுகிறார் என்று நினைத்திருக்கிறார்.
அந்த குரல் இருந்தவர் மிக அவசரமாக அவளது Touch n Go Pin தேவை என்று கேட்டிருக்கிறார். இது வாடிக்கையாக நடக்கும் ஒன்றுதான். அவளது முதலாளி இதுபோன்ற உதவிகளை ஏற்கனவே கேட்டிருந்ததால், அப்பெண்ணும், அந்த Pin-னை அனுப்பியுருக்கிறார். பிறகு, அந்த அழைக்கப்பட்ட நபரிடமிருந்து எந்தவொரு அழைப்பும் வரவில்லை. பின்னர் தனது முதலாளியிடம் கேட்டிருக்கிறார். அவரும் தாம் அழைக்கவில்லை என்றிருக்கிறார். பிறகுதான் அழைக்கப்பட்டவர் ஒரு Convenience Store-ரில் பொருள்களை வாங்கியிருப்பது தெரிந்திருக்கிறது
பின்னர் அப்பெண்ணுக்கு இதுவொரு AI குரல் ஏமாற்றம் என்று தெரிந்து போலீசாருக்கு புகார் கொடுத்திருக்கிறார்.
இந்த வகை ஏமாற்றுக்காரர்கள் தற்போது AI எனும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, மூலம் அவர்களின் குரல்களை நகல் எடுத்து, அவர்களின் பரிச்சயமான குரல்களை பயன்படுத்தி - ஏமாற்றி வருகின்றனர். இப்படியொரு ஒரு ஏமாற்று கும்பல் தற்போது உருவெடுத்து வருகிறது என்பதனை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். .
www.myvelicham.com