மெட்ரிக்குலேஷன் நுழைவுக்கு A மற்றும் 9A-க்களை ஏற்க வேண்டும் செனட்டர் சிவராஜ்
Senator Sivaraj urged that A and 9A grades should be accepted as eligibility

Dated: 18.5.2025 Time: 6.30 pm By - Punithai Chandran
பெட்டாலிங் ஜெயா,
மெட்ரிக்குலேஷன் கல்விக்கு A மற்றும் 9A-க்களை நுழைவுத் தகுதியாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று மேலவை உறுப்பினர் சிவராஜ் வலியுறுத்தியுள்ளார்.
10A+ அல்லது A பெற்றவர்களையே கல்வியமைச்சு தற்போதைய கொள்கையாகக் கொண்டிருப்பதால், A- மற்றும் 9A மட்டுமே எடுத்தவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று அவர் தெரிவித்தார். இந்தத் தகுதியைப் பெற்றுள்ள மாணவர்களின் கடின உழைப்பை இது புறக்கணிப்பதாக உள்ளது என்றும், இதுபோன்ற கண்டிப்பான விதிகளை விதிப்பது, மாணவர்களுக்கு நன்மை பயக்காது என்றார்.
பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் சாதாரண பள்ளியில் இருந்து பெரும்பாலும் 9 பாடங்களை மட்டுமே தேர்ந்தெடுக்கின்றனர். இது கல்விக் கட்டமைப்பின் குறையே தவிர, மாணவர்களின் குறை அல்ல என்றார்.
கடந்த 2022 ஜூலை 30ஆம் தேதியன்று, 10A மற்றும் அதற்கும் மேல் மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் இனவேறுபாடின்றி, 2025-ஆம் ஆண்டு மெட்ரிக்குலேஷன் நுழைவில் வாய்ப்பளிக்கப்படும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியதை செனட்டர் சிவராஜ் நினைவுப்படுத்தினார்.
www.myvelicham.com நன்றி. எஃப்.எம்.டி