தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அன்னையர் தின வாழ்த்து

Greetings on the occasion of Than sri SA. Vigneswaran Mother's Day

தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அன்னையர் தின வாழ்த்து

10 May 2025 News By:Sivasubramaniam MIC 

"தாயிற் சிறந்த கோவில் இல்லை"  
தாய்க்கு ஈடு இணை எதுவும் இல்லை  தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அன்னையர் தின வாழ்த்து

ஆலயத்தின் கருவறையைவிட, அன்னையின் கருவறை சிறந்த ஒன்று  என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அன்னையர் தினத்தில் அன்னையர்களுக்கு மகுடம் சூட்டியுள்ளார்

.

அன்னையின் சிறப்புகளை  ஒளவையார் பாடியிருக்கிறார்.  "தாயை சிறந்த கோவிலும் இல்லை" என்ற பாடல் ஒரு சான்று. அன்னையின் கருவறை ஆலய கருவறையைவிட சிறந்தது என்று ஒளவையார் மதிப்புட்டுள்ளார். அந்த சிறப்பு மிக்க குணநலன்களைப் பெற்ற அன்னையர்கள் அனைவருக்கும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது இனிய "அன்னையர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

அன்னையின் வயிற்றில் இருந்தே இந்த உலகத்தையும், உலக நடப்புகளையும் கவனிக்கத் தொடங்கும் குழந்தை, அவளது வளர்ப்பில் தான் நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்ல பிள்ளையாக வளர்ந்து வருகிறது. எத்தனையோ சவால்களையும், சிக்கல்களையும் ஆண்கள் எதிர்கொள்ளும் போதிலும், கருவிலேயே பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திப்பதுதான் தாய்மை. 

இந்தச் சமூகத்தில் பெருமதிப்புடன் திகழ, குடும்பத்தையும், குழந்தைகளையும், வேலையும், பக்குவமாக அணுகி,  வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவித சவால்களைச் சந்தித்து, சாதனை படைத்துவருபவர்தான் அன்னை. அன்னையின்றி நாம் யாருமில்லை, அன்னையின்றி  இவ்வுலகம் இல்லை. 

"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே,  அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே"  இந்தப்பாடல் வரிகள் சொல்லும் அன்னையின் பங்களிப்பை ஒரு தாயின் வளர்ப்பில் பிள்ளைகளின் எதிர்காலம் சிறக்கும் என்பது எழுதப்படாத உண்மை. 

அதனால்தான் பாரதியார் பெண்களுக்குக் கல்வி முக்கியம் என்பதை அறிவுறுத்தினார். காரணம் கல்வி வீட்டையும், குழந்தைகளையும் சரியான முறையில் பராமரிக்க உதவும். 
பொறுப்புள்ள ஆளுமைகளை உருவாக்குவதில் தாயின் அற்பணிப்பு, பங்களிப்பு அளப்பரியது. 

ஆகையால், பெண்களின் தனித்தன்மை போற்றிப் பாதுக்காக்கபட வேண்டும். பெண்கள் ஒரு தாயாக தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து மேலும் சிறக்க தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தமது   வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

News By: Sivasubramaniam MIC 

www.myvelicham.com