வழிபாட்டுத் தலங்களையும் குறிவைப்பது, சர்வதேச சட்டத்தின்கீழ், தடைசெய்யப்பட்டது

Targeting places of worship is prohibited under international law.

வழிபாட்டுத் தலங்களையும் குறிவைப்பது, சர்வதேச சட்டத்தின்கீழ், தடைசெய்யப்பட்டது

10 May 2025 News By : Punithachandtan 

இந்தியாவை புறக்கணிக்குமா? அல்லது 
அமைதியை நிலைநாட்ட முயற்சிக்குமா?
மலேசியா மனிதாபிமான கொள்கையைப் பின்பற்ற 
ஆன்ரியன் பெரேரா கோரிக்கை

இவ்விரு நாடுகளுகளுக்கு இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் சர்வதேச அளவில் இந்தியாவை புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

 

மலேசியாவில், இவ்விரு நாடுகளுடனும் ஆழமான வரலாற்று வேர்களாலும், குடும்ப உறுவுககளாலும் பின்னப்பட்டுள்ளதால்,. மலேசிய இதனை  உணர்ச்சிப்பூர்மான எதிர்வினைகளை விட, மனிதாபிமானக் கொள்கையால் வழிநடத்தப்பட வேண்டுமென்று, வடக்கு-தெற்கு முன்முயற்சியின் நிர்வாக இயக்குநரும், மனித உரிமை ஆர்வலருமான ஆன்ரியன் பெரேரா தெரிவித்துள்ளார். .இந்த விவகாரத்தில் போர் அல்லது வன்முறையைத் தவிர்த்து, மனிதாபிமான மற்றும் அரசியல் ரீதியாக தீர்வு காண வேண்டுமென்றார். 

பொது மக்களையும், வழிபாட்டுத் தலங்களையும் குறிவைப்பது, சர்வதேச சட்டத்தின்கீழ், தடைசெய்யப்பட்டுள்ளது என்று அவர் சினார் டெயிலிடம் செய்தியிடம் கூறியுள்ளார்.

thanks sinar 

myvelicham.com