ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் மலேசியா, வியட்நாமை 4-0 என வென்றது

Malaysia secured a resounding 4-0 victory over Vietnam in the 2027 Asian Cup Group F qualifying match, marking their first win against Vietnam in 11 years.

ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் மலேசியா, வியட்நாமை 4-0 என  வென்றது

Dated: 11.6.2025   Time: 11.40 am   By: Punithai Chandran

கோலாலம்பூர்,  

நேற்று இரவு புக்கிட் ஜாலில் தேசிய மைதானத்தில் நடைபெற்ற 2027 ஆசியக் கோப்பை குரூப் எஃப் தகுதிச் சுற்றின் இரண்டாவது போட்டியில், வியட்நாமை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், 11 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக வியட்நாமுக்கு எதிராக மலேசிய தேசிய கால்பந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

இதன்​ மூலம், மலேசியா அக்டோபர் 9 ஆம் தேதி தங்கள் மூன்றாவது குரூப் எஃப் போட்டிக்காக லாவோஸ் செல்கிறது.

4-0 என்ற வெற்றியின் மூலம், மலேசியா குரூப் எஃப் பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முன்னிலை வகிக்கிறது, அதே நேரத்தில் வியட்நாம் மூன்று புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.
நன்றி பெர்னாமா

Top of Form