தெங்கு ஸஃப்ரூலுடன் அரசியல் நிலைப்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தாது
Deputy Prime Minister Ahmad Zahid Hamidi stated that his political differences with Investment, Trade and Industry Minister Tengku Zafrul Aziz will not impact their relationship

Dated: 11.6.2025 Time: 10.15 am By: Punithai Chandran
கோலாலம்பூர்,
தங்களது அரசியல் நிலைப்பாடுகளில் குறிப்பாக, பொருளாதார மற்றும் வர்த்தக செயல்பாடுகளை மேற்கொண்ட போதிலெல்லாம் தனக்கும், தெங்கு ஹஃப்ருல் அஸிஸ்-க்கும் இடையிலான உறவு எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று துணைப் பிரதமர் அகமட் ஸாஹிட் கூறினார்.
நேற்று, ஏற்றுமதித் துறையில் பெண்கள் என்ற கருத்தரங்கினை தொடக்கி வைத்த போது, அரசாங்கத்தின் பொதுவான மற்றும் அரசியல் விவகாரங்களை ஒருபுறம் வைக்க வேண்டும் என்பது எனது நிலையான கோட்பாடாக உள்ளது. அம்னோவின் தலைவர் என்ற முறையில் தங்களது நட்பு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்றார்.
முன்னதாக, முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சராக இருந்த தெங்கு ஸஃப்ரூல் அஸிஸ், மே 30 அன்று அம்னோவை விட்டு விலகி, பிகேஆர் கட்சியில் சேர விருப்பம் தெரிவித்திருந்ததைத் அடுத்து, ஸாஹிட் இவ்வாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஏற்றுமதித் துறைகளில் பெண்கள் முன்னேற வேண்டும். குறிப்பாக, கிராமப்புற பகுதிகளில் வாழும் பி40 வருவாயினைப் பெறுவோரை உலகச் சந்தைகளில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
மேலும், அதிக திறன் கொண்ட பெண்கள் தொழில் முனைவோர்களுக்கான நிதி உதவித் திட்டம் மற்றும் சந்தையில் தட்டுபாடுகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கான நிதி உதவித் திட்டம் ஆகியவற்றுக்காக, Global Women Empowerment Fund- நிதியை ஏற்றுமதி தொழிலுக்கு ஏற்ற வையில் சீரிமைக்கப்பட வேண்டும் என்றும் ஹாகிட் கூறினார்.
நன்றி. எஃப்எம்டி