பினாங்கு இந்திய வர்த்தக சங்கம் தொடர்ந்து வளர்ச்சி காணுகிறது

பினாங்கு இந்திய வர்த்தக சங்கம் தொடர்ந்து வளர்ச்சி காணுகிறது
பினாங்கு இந்திய வர்த்தக சங்கம் தொடர்ந்து வளர்ச்சி காணுகிறது

Dated: 25.6.2025  Time: 2.15 pm   By: Selvam Sadayam

பினாங்கு, மே 24,

பினாங்கு இந்திய வர்த்தக சங்கம் தொடர்ந்து வளர்ச்சி காணுகிறது              

உலக வர்த்தக அரங்கில் முதன்மை நிலையில் உயர்ந்து நிற்கும், பினாங்கு மாநில இந்திய வர்த்தக மற்றும் தொழிலியல் சங்கத்தின் வளர்ச்சியைக் கண்டு அதன் தலைவர் டத்தோ பார்த்திபன் பாராட்டிப் பேசினார். .

102-ஆம் ஆண்டு விழாவில் பேசிய டத்தோ பார்த்திபன், மித்ரா அறவாரியத்தின் வழி, சிறு தொழில்களைச் செய்வதற்காக தலா ​5,000 ரிங்கிட்டினை 97 வியாபாரிகளுக்கு பெற்​றுத் தரப்பட்டு,அவர்கள் பயனடைந்து வருவதாகக் கூறினார்.  

விரைவில் மாநிலத்திலுள்ள முக்கிய இடங்களிலும் இதுபோன்ற திட்டங்கள் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதையும் டத்தோ பார்த்திபன் கூறினார்.

நடந்து முடிந்த 100-ஆம் ஆண்டு விழாவின்போது, சங்கத்துக்கு ஒரு லட்சம் வெள்ளி சேகரிக்கப்பட்டு, இன்று ஒரு மில்லியன் வெள்ளி சேமிப்பு வங்கி கணக்கில் இருந்து வருவதையும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வை அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்த, பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச் சுழல் ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ   சுந்த​ரராஜு சோமு பேசுகையில், மலேசிய இந்தியர் வர்த்தக சங்கம் 102 ஆண்டுகளைக் கடந்து, ஒரு சரித்திர பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது என்றார்.

நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒற்றுமையை வளப்படுத்தினால்,  மலேசிய மட்டுமின்றி, உலக நாடுகளுக்கு ​நிகராக முன்னேற முடியும். காரணம், நாம் அனைவரும் வாழ வந்த இனமல்ல – ஆள வந்த இனம் என்று மார்தட்டிக் கூறலாம் என்று டத்தோஸ்ரீ சுந்தராஜு சோமு தமதுரையில் ​கூறினார்.

இந்நிகழ்ச்சியில் 300-க்கும் அதிகமான பிரமுகர்களுடன், வர்த்தகர்களும் கலந்து கொண்டு, தங்களது கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.