வீடுகளை பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகாமையில் கட்டுவது சிறந்த அணுகுமுறை

An urban design expert suggests building high-density residential units on park-and-ride lots adjacent to train stations as a more practical and affordable alternative to constructing homes directly atop existing stations due to structural limitations.

வீடுகளை பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு அருகாமையில் கட்டுவது சிறந்த அணுகுமுறை

Dated: 12.6.2025   Time: 2.05 pm  By Punithai   

பொதுப் போக்குவரத்து நிலையங்களுக்கு மேலாகவோ அல்லது அருகிலோ புதிய பொது வீடுகளை உருவாக்குவதற்கான ஆலோசனையை, அண்மையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவித்திருந்தார்.

அவரது ஆலோசனைக்கு பதிலளிக்கும் வகையில், டெய்லர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கெயித் தான், ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களுக்கு மேல் வீடுகளைக் கட்டுவது பெரிய கட்டுமான வரம்புகளால் சாத்தியமற்றது என்றும், அதற்குப் பதிலாக park-and-ride இடங்களை பயன்படுத்தலாம். இதன்வழி கீழ்த்தளம் கார் நிறுத்துமிடமாகவும், மேல்தளத்தில் குடியிருப்புக் கட்டிடங்களை எழுப்பிக் கொள்ளலாம் என்றும் தனது கருத்ததைத் தெரிவித்தார்.

ரயில் நிலையம், அதன் கட்டுமானத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் செங்குத்து விரிவாக்கத்திற்கு இடமளிக்கும் வகையில் வடிவமைக்கப்படாவிட்டால், ஏற்கனவே உள்ள MRT அல்லது LRT நிலையங்களுக்கு மேலே, புதிய கட்டிடங்களைக் கட்டுவது மிகவும் கடினம் என்றும் டெய்லர்ஸ் கட்டிடக் கலை இணைப் பேராசிரியருமான தான் சுட்டிக் காட்டினார்.