நாட்டின் வளர்ச்சிக்கு பணக்காரர்கள் அதிகம் பங்களிக்க சாண்டியாகோ வலியுறுத்துகிறார்
Former Klang MP Charles Santiago advocates for a 2% wealth tax on Malaysia's richest, arguing it could generate significantly more revenue than the expanded Sales and Service Tax (SST).

Dated: 12.6.2025 Time: 1.35 pm By Punithai
பெட்டாலிங் ஜெயா,
சொத்து வரி, அரசாங்கத்தின் விற்பனை மற்றும் சேவை வரிகளை விரிவுபடுத்துவதன் மூலம் 5 பில்லியன் ரிங்கிட் வருவாயைவிட சுமார் 60 சதவிகிதம் அதிகமாக ஈட்ட முடியும் என்று கிள்ளான் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார். பணக்காரர்களுக்கு பிரபலமற்றதாக போய்விடும் என்ற அச்சத்தின் மத்தியில், செல்வந்தர்களுக்கு வரி விதிக்க அரசாங்கம் தயங்குவதாக துணை உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கைத் தர அமைச்சர் ஃபவுசியா சாலே தெரிவித்தார்.
மாளிகைகளுக்கு வரி விதிக்காமல் எதற்காக வாழைப் பழத்திற்கும், எண்ணைக்கும் வரி விதிக்க வேண்டுமென்று விமர்சித்தார்.
மலேசியாவில் முதல் 50 செல்வந்தர்களள் 90 US பில்லியன் சொத்து வைத்துள்ளனர் என்று சந்தியாகு சுட்டிக் காட்டினார். 100 மில்லியன் ரிங்கிட் சொத்துக்களுக்கு 2 சதவிகிதம் செல்வந்தர் வரி என்பது 2 மில்லியன் ரிங்கிட் ஆகும். இந்தப் பணத்தைக் கொண்டு 500,000 பள்ளி உணவுத் திட்டங்களுக்கும், உதாரணமாக, குறைந்த விலையில் வீடுகளுக்கு சூரிய ஆற்றல் தகடுகளை நிறுவப் பயன்படுத்தலாம் - இது மின்சார கட்டணங்களைக் குறைக்கும் - வருவாயை உருவாக்கும் - மற்றும் சுத்தமான ஆற்றலை மின் கட்டத்திற்கு வழங்கும் என்றார்.
அதிகரித்து வரும் ஏற்றத் தாழ்வு நாடுகளை அரித்து வருவதால், நுகர்வு வரிகளைவிட, செல்வ வரி விதிப்புக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், இந்த விஷயம் இறுதியில் கண்ணோட்டம் மற்றும் முன்னுரிமைகளைப் பொறுத்தது என்று சாண்டியாகோ வலியுறுத்தினார். நன்றி. எஃப்எம்டி