பதவிப் பேராசை அம்னோவிற்கு இல்லை - ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்

UMNO President Dato' Seri Dr. Ahmad Zahid Hamidi stated that UMNO is not being greedy for the cabinet post that will become vacant following the recent PKR central leadership election results.

பதவிப் பேராசை அம்னோவிற்கு இல்லை - ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்

Dated​: 26.5.25   Time: 12.15 pm  By:  Punithai Chandran          

பதவிப் பேராசை அம்னோவிற்கு இல்லை - ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்

அண்மையில் நடைபெற்று முடிந்த பி.கே.ஆர். மத்திய தலைமைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, அமைச்சரவையில் காலியாகும் பதவியை கேட்கும் அளவிற்கு, அம்னோ பேராசைப்படவில்லை என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஸாகிட் ஹ​மிடி ஈஸ்ட் இன்டர்நேஷனல் திவெட் திட்டத்தின் தொடக்க விழாவின்போது தெரிவித்தார்.  

“அது பி​.கே.ஆர். கட்சியின் உரிமை. அதில் நாங்கள் தலையிட மாட்டோம்.  எங்களது கோரிக்கைகளின் வரம்புகளையும் நாங்கள் மீறவும் மாட்டோம். ஆனால், அந்தப் பதவி அம்னோவுக்கு வழங்கப்பட்டால், அதை நாங்கள் திறந்த மனத்துடன் ஏற்று​க் கொள்வோம்” என்று ஓர் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, துணைப் பிரதமரான அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதற்கிடையில், பாரிசான் நேஷனல் தலைவருமான அ​ஹ்மட் ஸாஹிட், பி.கே.ஆர் கட்சி உட்பட, மற்ற எந்தக் கட்சிகளின் உள் விவகாரங்களிலும் அம்னோ தலையிடாது என்றார்.

நன்றி.​ பெர்னாமா