12 May 2025 அகத்தியர் வேதம் நூல் வெளியீடு

Release of the Agathiyar Veda book on May 12, 2025

12 May 2025 அகத்தியர் வேதம் நூல் வெளியீடு
12 May 2025 அகத்தியர் வேதம் நூல் வெளியீடு

Date ; 10 May 2025 News By: Ponrangan 

தமிழ் ஆர்வலர் பெருமக்களே, 
அகத்தியர் அருள் ஞான சபை ஏற்பாட்டில் அகத்தியர் வேதம் என்ற நூல் விழா சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. 
இந்நிகழ்ச்சி கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ்,ஜாலான் ஸ்கோட், கலா மண்டபத்தில்,  வரும் ஞாயிற்றுக்கிழமை, 12ஆம் தேதி, பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

 
நமது தமிழ் மன்னர்கள் ராஜராஜ சோழன் பெரும் மன்னர்கள் பொக்கிஷமாக போற்றப்பட்ட பல சங்ககால நூல்களான பதிற்றுப் பற்று, பரிபாடல், நற்றிணை, குறுந்தோகை, எட்டுத் தொகை, பத்துப் பாட்டு மற்றும் தேவார பதிகங்களைப்  பார்த்திருப்போம். 
அதேபோல் நாம் குருவாகப் போற்றப்படும், அகத்தியர் மாமுனிவரால் எழுதப்பட்ட, அகத்தியர் வேதம் என்ற இந்த நூல் 365 பக்கங்களைக் கொண்டு, ஒரு நாள் ஒரு சித்தர் வாக்கு வேதம் என்று    ஒப்புவிக்கவும், தமிழர்கள் மறந்துபோன ஆன்மீக நெறிகள் கொண்ட நூலாக  இந்த நூல் மலர்ந்துள்ளது.  
எனவே, இந்த நூல் வெளியீட்டிற்கு தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் திரண்டு வரும்படி அகத்தியர் அருள் ஞான சபை அன்புடன் கேட்டுக் கொள்கின்றது.