இளநீர் உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியையும் தரும்
Tender coconut gives strength and rejuvenation to the body.
Date :11 May 2025 News By: Ganapathy
தண்ணீருக்குப் பதிலாக இளநீர் அருந்தலாமா? பொதுவாகக் கூற வேண்டுமென்றால், இருதய ஆரோக்கியத்தை நன்மையளிக்கிறது உடல் சூட்டை தணிக்கிறது
மலச்சிக்கலைத் தடுக்கிறது வாய்ப்புண் – வயிற்றுப் புண் பாதிப்புகளை சரி செய்கிறது சிறுநீர் எரிச்சலை சரி செய்கிறது.
உடலின் எலக்ட்ரோலைட்டுகளை மீட்டெடுக்கிறது
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது தோளின் நிறத்தை மிளிர வைக்கிறது பசியைத் தணிக்க உதவுகிறது
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுகிறது எடையை குறைக்கிறது. பெரியவர்களுக்கு இதுவொரு புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக கருதப்படுகிறது.
அதேநேரத்தில், பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இளநீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும். இளநீரில் கலோரிகள் மிகக் குறைவாக உள்ளன. காரணம், இளநீரில் கொழுப்பு இருப்பதில்லை. வைட்டமின்கள் B3,B5 பயோட்டின் B2, ஃபோலிக் அமிலம் மற்றம் சிறிய அளவில் B1 மற்றும் B6 மற்றும் சோடியம், பொட்டாசியம், கால்சியம், இருப்பு மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்களுடன் அமினோ அமிலங்கள் மற்றும் பயோ ஆக்டிவ் சேர்மங்களும் அடங்கியுள்ளன.
தினமும் இளநீரை குடிக்கும் பொழுது, பழங்களை உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இளநீருக்குப் பதிலாக பதிலாக அதிகளவு பழங்களை உட்கொள்வது அதிகளவு உடலில் குளிர்ச்சியை ஏற்படுத்தி விடும் என்பதோடு, அதிகளவிலான கலோரிகளை உருவாக்கி விடும். இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அண்மையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள், சீறுநீரகங்களில் பிரச்சினைகள் இருப்பவர்கள் அல்லது அதிகளவிலான பொட்டாசியம் இருப்பவர்கள் இளநீரை குடிப்பதை சற்று குறைத்துக் கொள்ள வேண்டும்.
இளநீருடன் இஞ்சி மற்றும் புதினா போன்றவற்றுடன் பருகும் பொழுது, கல்லீரல் மற்றும் சிறுநீகரகளில் உள்ள நச்சுக்களை நீக்கி - வடிகட்டி உடல் நலனை மேம்படுத்தும். அதே நேரத்தில், அதேபோல் அதிக பொட்டாசியம் கல்லீரல் ஆரோக்கியத்தினை சீர்படுத்தும். குறிப்பாக, இதுபோன்ற பானங்களை காலையில் எடுத்துக் கொள்வது உறுப்பினர்களின் செயல்திறனை அதிகப்படுத்தும்.
இளநீரானது ஆக்ஸிஜனேற்றிகளையும் அதிகரித்து, இரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவும். சீறுநீரகங்களில் உருவாகும் கற்களைத் தடுக்கிறது.
பெரியவர்களுக்கு இதுவொரு புத்துணர்ச்சி ஊட்டும் பானமாக கருதப்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இளநீரை குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
அதேபோல் இளநீர் குடிப்பதால் உடலில் பல மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது.
வெயில் அதிகமாக அடிக்கும் காலத்தில், குறிப்பாக கோடை காலத்தில் துவண்டுபோய் – நாக்கு வறண்டு போய் இருக்கும் இருக்கும் நேரத்தில் இளநீர் பருகினால், அது உடலுக்கு வலுவையும், புத்துணர்ச்சியையும் தரும்.
அதேபோல், குளிர் காலத்தில் சூப் வகைகள் அல்லது மூலிகை கசாயம் என்று குடிக்கும் பொழுது, இளநீரை அதில் சேர்த்துப் பருகலாம். இதனால், குளிர் காலத்தில் உடலை நீரிழப்பு ஆக்காமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த இளநீரில் அதிகமான நார்ச்சத்து மற்றும் இயற்கையான செரிமான நொதிகளைக் கொண்டுள்ளதால், வழக்கமான பணிகளைச் செய்வதற்கு மேலும் அதிக ஊக்கத்தைக் கொடுக்கிறது.
நமது இரத்தத்தில் கெட்ட கனிமங்களின் சேர்க்கையால், நச்சுக்கள் இருக்கும். இளநீர் அதனை வெளியேற்றச் செய்கிறது. இப்படி இளநீரின் மகத்துவம் புத்துணர்ச்சிக்காகவும் – மருந்தாகவும் பல நூறு ஆண்டுகள் பயன்பட்டு வருகின்றது. தென்னை மரங்களிலிருந்து கிடைக்கப் பெறும் அத்துணைப் பொருள்களும் மானிட மக்களின் வாழ்வுக்கு உதவியாகவும் – உறுதுணையாகவும் இருந்து வருகிறது. தென்னை மரத்திலிருக்கும் எந்தவொரு பொருளையும் வீணாக்க வேண்டிய அவசியம் இல்லை. தென்னை மரத்தில் தென்னங் குருத்து – பதநீர் என்ற தெலுவு பானம், கள் – இளநீர் – தேங்காய் என அனைத்தும் பருவதற்கும், உண்ணுவதற்கும் ஏற்றதாக இறைவன் படைத்திருக்கிறான்.
மகத்துவமான இந்தத் தென்னை மரத்திற்கும் பல பொருள் பொதிந்த பழமொழிகளை முன்னோர் எழுதி வைத்துள்ளனர்.
“தென்னைக்கு நீர் வார்த்தால் – தலையாலே பயன் தருமாம்!
“தென்னை செழித்தால் பண்ணை செழிக்குமாம்!”
ஒரு நகைச் சுவையான பழமொழியும் உண்டு – அது
“தென்னை மரத்துக் குரங்கே – என்னைப் பார்த்து இறங்கே!” –என்று
.
எனவே, தென்னை மரமும் – அதன் இளநீரும் மக்களுக்கு எக்காலமும் – எந்நேரமும் பயன்படும் ஒரு பானமாக – அருமருந்தாக இருந்து வருகிறது.
இயற்கைகை நேசிப்போம் - தென்னைக் காப்போம்!
www.myvelicham.com