கல்வியும் கருணையும் இசை விருந்து

Education and Compassion Music Feast

கல்வியும் கருணையும் இசை விருந்து

Date :01 May 2025 News By: RM Muniandy @ Chandran 

கெப்போங் மஇகா தொகுதி,கூட்டரசு பிரதேசம்  மஇகா தொகுதி, கல்வி புத்தாக்க ஆன்மா இயக்கம் ஆகியவை ஏற்பாடு செய்த 'கல்வியும் கருணையும்' எனும்  இசை விருந்து மஇகா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.


சிறப்பு பிரமுகராக மஇகா துணைத் தலைவர், சங்க ரத்னா டத்தோஸ்ரீ  மு. சரவணன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளரான இரா. கிருஷ்ணமூர்த்தி,இரண்டு ஆண்டுகளாக நடத்தி வருவதாகவும், கடந்தாண்டு 15 மாணவர்களுக்கு மடிக் கணினி வழங்கியதாகவும் இவ்வாண்டு 10 மாணவர்களுக்கும்  நோயால் பாதிக்கப்பட்ட ஒருசில மஇகா உறுப்பினர்களுக்கு நிதியுதவி செய்வதாகக் கூறினா்

.

அதனைத் தொடர்ந்து பேசிய டத்தோஸ்ரீ சரவணன்,  இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உழைத்த இந்தியச் சமுதாயம், 70 ஆம் ஆண்டுகளில் தோட்டத்தை விட்டு வெளியேறிய பிறகே நகர் புறங்களில் குடியேறி தங்களின் வாழ்க்கையை  சிறந்த முறையில் அமைத்துக் கொண்டனர்.  

நூறாண்டுகளாக இருந்து வரும் இந்து  கோயில்களை (Koyil Haram)  என்று  எப்படி சொல்ல முடியும்? 
ஒரு தீயணைப்புப் படை வீரர்   தீயை மற்ற இடங்களுக்குப் பரவாமல் அணைக்க வேண்டும். வேடிக்கை பார்க்கலாமா?

கடந்த முப்பது ஆண்டுகளில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது,  சம்பாதிக்க வந்த அந்நிய நாட்டுப் பிரஜைகளை,  (Pendatang Haram ) என்று கூறியதை ஏற்றுக்கொள்ள வில்லை அவ்வாறு இருக்கும் போது, நூறாண்டுகளுக்கும் மேலாக இந்நாட்டிலுள்ள இந்துக் கோயில்களை ( Tanpa Izin Koyil Haram) எனக்கூறுவதை கேட்டு மனம்  வலிப்பதாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.

www.myvelicham.com / Face book / Tik Tok / Intg / Likedin / google / You Tube / GET the Latest Headline News WhatsApp 014-3933002