பினாங்கு இந்திய முஸ்லிம்களுக்கான கழிவு

madani housing indian muslim

பினாங்கு இந்திய முஸ்லிம்களுக்கான கழிவு

Dated: 7.6.2025    Time: 5.00 pm   By: Punithai Chandran

பெட்டாலிங் ஜெயா,  இந்திய முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் 5% சதவிகித வீட்டு உரிமை கழிவு, பிற ச​மூகங்களின் உரிமைகளைப் பாதிக்காது என்று பினாங்கு வீட்டுவசதி மற்றும் ​சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் எஸ். சுந்தரராஜூ தெரிவித்தார்.

இந்தக் கழிவு, சமூகப் பொறுப்பினை முன்வைத்து, மேம்பாட்டாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. இதில் மாநில அரசின் எந்த நிதி உதவியும், மானியமும் இல்லை என்று அவர் இன்று அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.

பூமிபுத்ரா ஒதுக்கீடு உட்பட, அனைத்து தற்போதைய வீட்டுவசதி கொள்கைகளும் நடைமுறையில் தொடர்ந்து இருந்து வரும். இத்திட்டம் பினாங்கு மாநிலத்தின் முறையான, நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சித் திட்ட இலக்குடன் ஒத்திருப்பதாகவும் எஸ். சுந்தரராஜூ ​கூறினார்.

​பினாங்கில் விற்கப்படாத வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சுந்தரராஜூ தெரிவித்தார்.

இரு​ப்பினும் இக்கொள்கையை மறுசீரமைப்புச் செய்ய வேண்டுமென்று பினாங்கு டிஏபி தலைவர் ஸ்டீவன் சிம் கூறியதுடன், இதன் தொடர்பாக பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கான் யோவுடன் கலந்து பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அடுத்து வரவிருக்கும் மாநில செயற்குழு கூட்டத்தில் இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் மற்றும் விவாதத்திற்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

www.myvelicham.com நன்றி. எஃப்எம்டி.