நஜீப் தண்டிக்கப்படுவாரா? விடுதலைச் செய்யப்படுவாரா?
Will Najib be punished? Will he be released?
Date 08 May 2025 News By:Punithai Chandran
நிதி சம்பந்தப்பட்ட பண மோசடி குற்றச்சாட்டுகளை கைவிடுவதற்கான தனது வேண்டுகோள் ஜுன் 11 வெற்றிப் பெறுமா என்பதை டத்தோஸ்ரீ நஜீப் ரசாக் அறிய வேண்டும்.
அரசாங்கப் பிரதி வழக்கறிஞர் முகமட் அஷ்ரோப் அட்ரின் கமாருல் நீதிமன்றத்தில் பிரதிநிதித்துவ முடிவைத் தீர்மானிக்க கால அவகாசம் கோருவதாகத் தெரிவித்ததை அடுத்து, உயர்நீதி மன்ற நீதிபதி கே. முனியாண்டி தேதியை நிர்ணயித்தார்.
இன்றைய நீதிமன்றத்தின் நோக்கம், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனுப்பிய மனுவின் முடிவுக்கு கால நீட்டிப்பு கோருவதும், தனக்கு சுட்டிக்காட்டப்பட்ட அறிவுறுத்தல்கள் ஒரு மாத நீட்டிப்பாகும் என்றும் முகமட் அஷ்ரோப் கூறினார்.
எவ்வாறாக இருப்பினும், நஜீப்பின் தற்காப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் ஷாஃபி அப்துல்லா, விடுதலை உத்தரவுக்குப் (டிஎன்ஏஏ) பதிலாக, விடுவிப்பு உத்தரவு வழங்க முடியுமா என்று நீதிமன்றத்தைக் கேட்டார். பிரதிநிதித்துவம் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகப் போகிறது என்ற உண்மையின் அடிப்படையில், இந்த விசயத்தில் டிஎன்ஏஏ வழங்குமாறு Yang Arif-யிடம் தாம் கேட்பதாகவும் அவர் கூறினார்.
இது நீண்ட காலமாக உள்ளதால், இதனைச் சமாளிக்க இதுதான் சிறந்த வழி என்று தாம் நினைப்பதாகவும் முகமது ஷாஃபி பதிலளித்தார். கோரப்பட்ட நீட்டிப்பை வழங்கியப் பின்னர், புதிய விசாரணை தேதியில் பிரதிநிதித்துவத்தின் முடிவை நீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு முனியாண்டி ஏஜிசிக்கு அறிவுறுத்தினார். மேலும் டிஎன்ஏஏ விண்ணப்த்தின் மீதும் வாதங்களைத் தயாரிக்கமாறும் கட்சிகளைக் கேட்டுக் கொண்டார்.
நன்றி. மலாய் மெயில்
www,myvelicham.com