அரசாங்கம் உத்தரவிட்ட பிறகும்கூட,  ஈ-​ஹெய்லிங் செயல்பட்டுகிறது.

Despite the government's suspension order due to licensing and insurance issues, e-hailing services continue to operate nationwide. The company claims all drivers comply with transport regulations and that they collaborate with training centers and road transport authorities to ensure safety and legal compliance.

அரசாங்கம் உத்தரவிட்ட பிறகும்கூட,  ஈ-​ஹெய்லிங்  செயல்பட்டுகிறது.

Dated: 17.5.2025    Time: 2.50 pm

By: Punithai Chandran

அனுமதி மற்றும் காப்பீட்டு கோளாறுகளின் காரணமாக அதன் செயல்பாடுகளை நிறுத்துவதறகு அரசாங்கம் உத்தரவிட்ட பிறகும்கூட,  ஈ-​ஹெய்லிங் நாடு முழுவதும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஆனால், மக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டே தங்களது செயல்பாடுகளை தொடருவதாகவும், தங்களிடமுள்ள அனைத்து ஓட்டுநர்களும் போக்குவரத்து அமைச்சு மற்றும் பொதுப் ​போக்குவரத்து ஆணையமும் (ABAD) வழிகாட்டுதல்களின்படி, ​தேவையான பத்திரங்களின் சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது

.

கடந்த ஐந்தாண்டுகளாக செயல்பட்டுவரும் மேக்சிம், புதிய ஓட்டுநர்கள் PSV உரிமம் பெறவும், போக்குவரத்து விதிமுறைகளை கற்றுக் கொள்வதற்காகவும், ஓட்டுநர் பயிற்சி மையங்களுடனும், சாலை போக்குவரத்து துறையுடனும் ஒத்துழைத்து வருவதாகவும், இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

www.myvelicham.com நன்றி. மலாய் மெயில்