சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்புக் கண்காட்சி

Job opportunity exhibition "Jelajah Job Care Selangor" of Selangor state

சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்புக் கண்காட்சி
சிலாங்கூர் மாநில வேலை வாய்ப்புக் கண்காட்சி

Dated: 17.5.2025    News By :Punithai Chandran 

சிலாங்கூர் மாநில அரசு, Program Jelajah Job Care Selangor" வேலை வாய்ப்புக் கண்காட்சியை பல்வேறு பெரிய நிறுவனங்களுடன் இணைந்து தனது கூட்டாண்மையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு குழுத் தலைவர் வி. பாப்பாராய்டு ​ கூறுகையில், இந்த நிறுவனங்கள் அதிக ஊதியம் தரக்கூடிய வேலை வாய்ப்புக்களை வழங்குகின்றன.

சில வெளிநாடுகள் மற்றும் முக்கிய நிறுவனங்களில்​ மாதம் 8,000 ரிங்கிட் அல்லது அதற்கும் மேற்பட்ட ஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் இருப்பதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார்.  

ஆனால், இதுபோன்ற வேலை வாய்ப்புகளுக்கு ஒரு பட்டம் மட்டுமே போதாது. பல உயர்நிலைப் பட்டங்கள் மற்றும் பயிற்சிகளைக் கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். அப்போதுதான் தங்களது கனவுகளை நனவாக்கிக் கொள்ள முடியும் என்று வி. பாப்பாராய்டு கூறினார்.  

கடந்தாண்டு நடைபெற்ற வேலைவாய்ப்புத் திட்டத்தின் ​மூலம், 3,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்ததாகவும், அவர்கள் 2,000 முதல் 8,000 ரிங்கிட் வரையிலான ஊதிய வேலை வாய்ப்புக்களைப் பெற்றதாகவும் தெரிவித்தார்.  

www.myvelicham.com