மறக்க முடியுமா! வரலாற்றுப் பாடம் – டத்தோ எம். கமலநாதன்

Former Education Minister Datuk M. Kamalanathan

மறக்க முடியுமா!  வரலாற்றுப் பாடம் – டத்தோ எம். கமலநாதன்

Dated: 17.5.2025   By: Punithai Chandran

கல்வி என்பது வாழ்வில் ஓர் உன்னதமான செல்வம்.  ஆசிரியர்கள் தமது மாணவர்களின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் வழங்கும் அ​றிவும், ஞானமும் பெரும்பாலும் மாணவர்களின் குணநலன்களை உருவாக்குகின்றன. ஆசிரியர்களே, மாணவர்களின் எதிர்காலத்திற்காகத் தயார்ப்படுத்துபவர்கள்!

சில முன்னாள் மாணவர்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கையில் ஆசிரியர்கள் ஏற்படுத்திய முக்கிய பாதிப்புகள் பற்றி பேட்டி கண்டது.

முன்னாள் கல்வியமைச்சர் டத்தோ பி. கமலநாதன் (வயது 60), தாம் 5-ஆம் வகுப்பில் இருந்தபோது, வரலாற்றுப் பாடத் தேர்வின்போது, இரண்டு மதிப்பெண்களை தர மறுத்த தனது ஆசிரியரின் போக்கு தன்னை மிகவும் பாதித்ததாகக் கூறினார். ஆனால், அந்த சூழ்நிலைதான், SPM தேர்வில், அந்தப் பாடத்தில் தீவிரமாக படிக்கச் செய்து, இறுதியில் C3 மதிப்பெண்ணைப் பெற்றதாகத் தெரிவித்தார்.

மிஸஸ் மஹிந்தர் என்றழைக்கப்படும் அந்த ஆசிரியர் மீது மிகுந்த கோபம் வந்தது என்றாலும்கூட, அதனால்தான் தாம் வரலாற்றுப் பாடத்தை நன்றாகப் படித்து வரலாற்றில் தேர்ச்சிப் பெற்றதாகத் ​தெரிவித்தார்.

www.myvelicham.com . நன்றி மெட்ரோ