சுங்கை பீசி விரைவுச்சாலையில் பராமரிப்பு - நவம்பர் 30 வரை இரவு நேர பாதை அடைப்பு
Sungei Bese Lane closures will occur nightly from 10 PM to 6 AM in stages across both directions.

Dated: 5.6.2025 Time: 12.25 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்
Besraya (M) Sdn Bhd சுங்கை பீசி விரைவுச் சாலையில் திட்டமிடப்பட்ட சாலை பராமரிப்புப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பயனர்களின் வசதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆதரவுடன் இந்த பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சாலை மீண்டும் சீரமைப்புச் செய்வது மற்றும் கோடு போடுதல் போன்ற பராமரிப்புப் பணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். இந்தப் பராமரிப்புக் காலத்தின்போது, சுங்கை பீசி விரைவுச் சாலையின் இரு திசைகளிலும் கட்டம் கட்டமாக பாதைகள் மூடப்படும்.
போக்குவரத்து நிலவரம் மற்றும் பாதை அடைப்பு குறித்த தகவல்கள் நெடுஞ்சாலைகளில் உள்ள மின்னணு பலகைகள் மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.
நெடுஞ்சாலைப் பயனர்கள் அனைத்து வழிகாட்டுதல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இது சம்பந்தமான மேல்விவரங்களை அறிய Besline hotline 1-800-88-0999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி. எஃஎம்டி.