'பிரசரானா' நிறுவனத்தின் கடைசி டீசல் பேருந்துககள்
'Prasarana' company's last diesel buses

Date:17 July 2025 Time 9.00pm News By:Ganapathy
மலேசியாவில், கிளாங் பள்ளத்தாக்கு மற்றும் பினாங்கில் 310 புதிய டீசல் பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது 'மலேசியா பிரசாரானா பெர்ஹாட்' நிறுவனத்தால் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 14) முதல் பொது போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்ட தொடக்க விழாவில் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோனி லோக், "இது 'பிரசரானா' நிறுவனத்தின் கடைசி டீசல் பேருந்துகளை வாங்கும் முயற்சி என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறேன். அரசின், குறைந்த அளவு கார்பனை வெளியேற்றும், இந்த போக்குவரத்து திட்டத்துடன் இணைந்த 'பிரசரானா' நிறுவனத்தின் இந்த முடிவு, எதிர்காலத்தில் மின் வாகனங்களை நோக்கிய நகர்வின் ஒரு பகுதியாகும்" எனத் தெரிவித்தார்.
இந்த புதிய பேருந்துகள் 'Higer' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த பேருந்துகளானது அதிக மக்கள்தொகையுள்ள பகுதிகளில், குறிப்பாக அதிக பயண தேவையுள்ள வழித்தடங்களில் இயக்கப்படும். பயணிகள் அடிக்கடி பேருந்துகளை பெற வசதியாக இந்த முயற்சி உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.