ஜோகூர் வேப் தொழிற்சாலை அனுமதி சர்ச்சை: டாக்டர் ஜைனல் ஆரிஃபின் விமர்சனம்

Dr. Zainal Ariffin has criticized the granting of a license to US-based Inspire Technology Inc. to manufacture e-cigarette devices in Senai, Johor

ஜோகூர் வேப் தொழிற்சாலை அனுமதி சர்ச்சை: டாக்டர் ஜைனல் ஆரிஃபின் விமர்சனம்

Dated: 4.6.2025   Time: 11.40 am  By: Punithai Chandran

ஜோகூர், செனாயில் அமெரிக்காவை தளமாகக் கொண்ட Inspire Technology Inc. நிறுவனத்திற்கு ​உரிமம் வழங்கியது குறித்து  பெரும் தவறு என்று டாக்டர் ஜைனல் ஆரிஃபின் விமர்சித்துள்ளார். நிகோடின் அடிப்படையிலான திரவங்கள் அல்லது ஜெல்களைக் கொண்ட மின்னணு சிகரெட் சாதனைகளைத் தயாரித்து வருவதை முன்னிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது புகையிலைக் கட்டுப்பாட்டில் மலேசியாவின் முயற்சிகளுக்கு எதிராக உள்ளது என்றார்.  

இந்த அனுமதி Vape தொழிலுக்கு ஒப்புதல் அளிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும் என்றும், இளைஞர்களிடையே புகைப் பழக்கத்தை கட்டுப்படுத்த நோக்கம் கொண்டுள்ள அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முரணாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கான இடைக்கால உரிமம் கடந்த மாதம் கூட்டாட்சி மற்றும் மாநில அதிகாரிகளால் வழங்கப்பட்டது என்று சுகாதார ஆலோசனைக் குழுவான CodeBlue அண்மையில் செய்தி வெளியிட்டது. பின்னர், சுகாதார அமைச்சு இந்த வேப் திவரங்கள் மலேசியாவில் விற்பனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அவை பொது சகாதார சட்டம் 2024 (சட்டம் 852)- இன் கீழ் இச்சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஜூன் 4, 2025 நிலவரப்படி, சுகாதார அமைச்சகம் Inspire Techonology Inc. நிறுவனத்திற்கு உள்​ளூர் சந்தையில் அதன் தயாரிப்புகளை விற்க அனுமதி இல்லை என்றும், வழங்கப்பட்ட இந்த உரிமம் ஏற்றுமதி நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் தெளிவுப்படுத்தியுள்ளது. அவ்வாறு    உள்​ளூர் சந்தையில் விற்க வேண்டுமென்றால், அந்நிறுவனங்கள் MOH-உடன்  பதிவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

நன்றி. எஃப்எம்டி