மிதவை சூரியசக்தி உற்பத்தி, தற்காப்பு மாலத்தீவுடன் ஒத்துழைக்கும்.
Hovercraft solar power generation will cooperate with defensive Maldives.
29 April 2025 News By:MuniandyKrishnan@RMChandran
புத்ரா ஜெயா ஏப்-29
மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி, தற்காப்பு மற்றும் இலக்கவியல் தொழில்நுட்பம் போன்ற புதியத் துறைகளை விரிவுப்படுத்த மலேசிய மாலத்தீவுடன் இணைந்து செயலாற்றும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இரு நாடுகளும் கடல் சார்ந்த நாடுகள் என்று குறிப்பிட்ட பிரதமர் அவர்கள், ஒத்துழைப்புக்கான சாத்தியக் கூறுகள் விரிந்து கிடக்கின்றன என்றும், குறிப்பாக, மிதக்கும் சூரியசக்தி உற்பத்தி, பாதுகாப்பு, டிஜிட்டல் போன்ற புதிய வளர்ச்சித் துறைகள் உள்ளன என்றும்,
மாலத்தீவு பிரதமர் டாக்டர் முகமது முயிசுவுடன் இணைந்து ஒரு கூட்டு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். அவருக்கு பெர்டானா புத்ராவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது.
அந்நாட்டுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் (Stem) மற்றும் தொழிற்திறன் கல்வி (TVET) ஆகியவற்றில் மலேசியா ஒத்துழைப்பு வழங்கும். இவ்விரு நாடுகளுக்கிடையிலான வலுவை மேலும் அதிகரிக்க, மாலத்தீவுடன் இணைந்து மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன என்றும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.