26 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத DBKL குடியிருப்பாளர்கள்

Kuala Lumpur City Hall (DBKL) has revealed that some tenants in its public

26 ஆண்டுகளாக வாடகை செலுத்தாத  DBKL குடியிருப்பாளர்கள்

Dated: 20.5.2025   Time: 7.15 pm  By: Punithai Chandran

கோலாலம்பூர் மாநகர் மன்ற அடுக்குமாடி (PPR) வாடகை வீடுகளில் தங்கியிருப்பவர்கள் 26 ஆண்டுகளுக்கும் மேலாக வாடகைச் செலுத்தாமல் உள்ளனர்  இதன் வாடகை ​பராமரிப்புக் கட்டணம் இல்லாமல், மாதம் ஒன்றுக்கு RM124.00 ரிங்கிட் மட்டுமே என்றும் கோலாலம்பூர் டத்தோ பண்டார் மைமுனா ஷாரிஃப் தெரிவித்துள்ளார்..

கம்போங் மு​ஹ்பாவில் 1.9 மில்லியன் ரிங்கிட் மற்றும் தேசா ஜெராங்கில் 1.28 மில்லியன் ரிங்கிட் நிலுவையில் உள்ளது. அதேபோல் மாநகர் மன்றம் நிர்வகிக்கக் கூடிய PPR மற்றும் ​PA வீடுகளின் வாடகை நிலுவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, DBKL வாடகையாளர்களைச் சந்தித்து, அவர்கள் வாடகையைச் செலுத்தாத காரணங்களை அறிவது மற்றும் அவர்களின் நீர் மீட்டர்களை பூட்டுவது ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்   என்றும் அவர் தெரிவித்தார்.

DBKL  குடியிருப்பாளர்களை வெளியேற்றும் அதிகாரம் மாநகர் மன்ற​த்திற்கு இருந்தாலும், அவர்களின் பெரும்பாலோர் B40 பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால், இது சம்பந்தமாக தாம் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் லாலிஹிா மு​​ஸ்தாபாவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக டத்தோ பண்டார் மைமுனா ஷாரிஃப் தெரிவித்தார்.

 

www.myvelicham.com  . எஃப்.எம்.டி.