13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்க்கக்கூடிய இந்தியர்களுக்கான ஒரு நீண்டகால செயல்திட்டம்.

A long-term action plan for Indians to be included in the 13th Malaysian Plan.

13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்க்கக்கூடிய இந்தியர்களுக்கான ஒரு நீண்டகால செயல்திட்டம்.

Date 21 May 2025   Time 8,00pm News By: DASHENEE

மாண்புமிகு பிரதமர் மற்றும் நூருல் இசா இருவரும் எனக்கு இணையான ஊக்கமளிக்கின்றனர் – திரு. சண்முகம் மூக்கன்
2023-ஆம் ஆண்டு, நான் பிரதமரின் அலுவலகத்தில் பணிக்குச் சேர்ந்தபோது, மாண்புமிகு நூருல் இசா அன்வாருடன் இணைந்து செயலாற்றத் திட்டமிட்டேன். இந்திய சமூகத்தை உயர்த்தவும், முன்னேறச் செய்யவுமான பிரதமரின் நோக்கத்தின் ஒரு பகுதியாக, கல்வி மற்றும் சமூக-பொருளாதாரம் மீதான முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடிவெடுத்தேன்

.

இதற்கு, பிரதமரின் இலக்குகளுடன் முழுமையாக ஒத்துபோகும் ஒருவர் தேவை என்பதை உணர்ந்தேன். உண்மையைச் சொல்வதானால், பிரதமரின் இலக்கை அவருடைய சொந்த மகளைத் தவிர வேறு யாரால் நன்கு புரிந்துகொள்ள முடியும்?
மாண்புமிகு நூருல் இசா இன்று வகிக்கும் இடத்திற்கு வெறுமனே அவருடைய பெயருக்காக மட்டும் வந்துவிடவில்லை. சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கிய ததே இரத்தம், வியர்வை, தியாகங்கள் ஆகியவற்றால் அவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். அவர் குடும்பப் பெருமையை மட்டும் சுமந்து வரவில்லை, மாறாக அவ்வியக்கத்தைத் தொடர்ந்து எரியச்செய்யும் சுடராகத் திகழ்கிறார்.
நான் மாண்புமிகு நூருல் இசா அவர்களிடம் பேசியபோது, பிரதமரிடம் இருக்கும் அதே உறுதியான மனப்பாங்கை உணர்ந்தேன். யாரையும் பின்னுக்குத் தள்ளாத மனநிலையும், ஜாதி, மதம், அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்காத  மனப்போக்கும் அவரில் காணப்பெற்றேன்

.

அவரது அக்கறை மேலோட்டமானதோ அல்லது தற்காலிகமானதோ அல்ல. அது ஆழமான சிந்தனை, நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் உண்மையான மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நோக்கத்திலிருந்து வெளிப்பட்டதாகும்.
முழுத்திரமான தீர்வுகளுக்கான அவரது எண்ணத்துடன், இந்திய சமூகத்தின் எதிர்கால எழுச்சிக்கான முயற்சியைக் கட்டியெழுப்ப இருகட்டப் பயணத்தைத் தொடங்கினோம். கல்விப் பின்னடைவுகள், வழங்கப்படாத வாய்ப்புகள், மக்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திக்காத பாராமுகம் போன்ற அடிப்படைச் சிக்கல்களை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் ஆகிய மக்கள் பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு, உண்மைத் தேவைகளைக் கண்டறிந்தோம்.
அதன் அடிப்படையில், தற்போதைய தேவைகளை அடிப்படையாகக் கொண்டு

,

13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்க்கக்கூடிய இந்தியர்களுக்கான ஒரு நீண்டகால செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்தோம். மாண்புமிகு பிரதமரின் ஆதரவுடன், பிரதமரின் அலுவலகம் இளைஞர்கள், பெண்கள், கல்வியாளர்கள், அரசு சார இயக்கங்கள், பொருளாதார நிபுணர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பலருடன் கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தியது. மாண்புமிகு நூருல் இசா அவர்கள் சமீபத்திய அமர்வில் கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
அவருடைய நம்பிக்கைகள் மற்றும் அனுபவங்களின் வழி, வாய்ப்புகள் பெறவும் தொடர்ந்து நிலைத்திருக்கவும் கல்வியே இன்றியமையாதது என்பதில் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளார்.

நீண்டகாலமாக 'ப்ரோஜெக் சக்கிட்' (projek sakit) என வகைப்படுத்தப்பட்டிருந்த ஐந்து தமிழ்ப் பள்ளிகளை மீட்டெடுக்கும் எனது முயற்சிக்கு அவர் பெரும் ஆதரவினை வழங்கினார். இதில், சிலாங்கூரிலுள்ள  சீபீல்ட் மற்றும் பிரவுண்ஸ்டன் தமிழ்ப்பள்ளிகள், நெகிரி செம்பிலானிலுள்ள பெர்த்தாங் மற்றும் சாகா தொட்டத் தமிழ்ப்பள்ளிகள், பேராக்கிலுள்ள ஹீவுட் தமிழ்ப்பள்ளி ஆகியவை அடங்கும்.
அவருடைய உறுதி அதோடு நின்றுவிடவில்லை. தமிழ்ப் பள்ளிகள் மற்றும் தமிழ்க் கல்விக்காக ஒரு சிறப்புக் குழுவை உருவாக்கினோம். இந்திய சமுதாயத்தின் கல்வி நிலை சிறந்த மேம்பாட்டைக் காண்பதற்கான பணி திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் பயனளிக்கும் தீர்வுகளைச் செயல்படுத்துவதே இக்குழுவின் நோக்கமாகும்.
தொடர்ந்து நடந்த கலந்துரையாடல்கள் மற்றும் பல ஒன்றுபட்ட முயற்சிகளுக்குப் பின்னர், பிரதமர் ஆறு தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக RM30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை வழங்கியதை நான் பெருமையானதாகப் பகிர்கிறேன்.

இப்போதைக்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து நான், கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சுடன் நெருக்கமாக பணியாற்றி, இந்த நிதி ஒதுக்கீடு சரியாகவும், வெளிப்படையானதாகவும், சமூகத்திற்கு உண்மையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும் வழங்கப்படும் என்பதை உறுதிசெய்கிறேன். இந்த நிதி, விரைவில் அதிகாரப்பூர்வமாக முறையான வழியில் பகிரப்பட்டு தமிழ்க்கல்வி வளர்ச்சியில் அபரிமிதமான மேம்பாட்டைக் கொண்டுவரும்.
இதற்கு அடுத்த நிலையில், மஸ்ஜிட் இந்தியா கோவில் விவகாரத்திற்குப் பிறகு கோவில்கள் மீது வந்த விமர்சனங்கள் மற்றும் இனவாத கருத்துகள் குறித்து அவர் உண்மையாகவே மிகுந்த கவலையைக் கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. இது சமாதானமாகவும் மரியாதையுடனும் தீர்க்கப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார். இந்தச் சிக்கலின் நீண்டகாலத் தீர்வுகளுக்கான முன்னெடுப்புகளை நாங்கள் இணைந்து தற்போது உருவாக்கி வருகிறோம். அதற்கான வேலைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மாண்புமிகு நூருல் இசா அவர்களுடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவத்தில் இவையாவும் நான் கண்டவையாகும். வெற்று வாக்குறுதிகளோ, வெளிப்படையான காட்டுப் போக்குகளோ எதுவும் கிடையாது. உண்மையான திட்டமிடலும், ஒட்டுமொத்த மலேசியர்களுக்காக சேவை செய்யும் தீர்மானமும் மட்டுமே இருக்கின்றன. இந்திய சமூக செயல்பாட்டுத் திட்டம் இதன் வெளிப்பாடேயாகும். இப்போது அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நேரம்.
எனவே, சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட நிலையில், அவரைத் தவிர, மக்கள் நீதிக் கட்சியின் கொள்கைகளை உண்மையிலேயே புரிந்து, அனைத்து சமூகங்களுக்கும் அவற்றைத் தொடர்ந்து கொண்டு செல்ல வேறு யாரால் முடியும்?

www.myvelicham.com