அதிரும் அரசியல் களம் நெகிரி செம்பிலான்சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

Negeri Sembilan State Assembly has been dissolved.”

அதிரும் அரசியல் களம் நெகிரி செம்பிலான்சட்டமன்றம் கலைக்கப்பட்டது.

Date: 05 Jume 2026  News By: Ganapathy Krishnasamy

   மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீஅமினுடின் ஹரூன் 36 சட்டமன்ற த்தொகுதிகளைக்கொண்ட  நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றம்,16 ஆவது மாநிலத்தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது.

இவ்விடயத்தை நெகிரி  செம்பிலான் மாநில முதலமைச்சர் டத்தோ ஸ்ரீ அமினுடின் ஹரூன் தனது இல்லத்தில் செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தார்.
யாங் டி பெர்த்துவான்  பெசார்  துவாங்கு முஹ்ரில் முனார்  துவாங்கு மன்னார் தனது கோரிக்கையை  ஏற்று கொண்டதைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்படுவதாக  மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ ஹரூன் அமினுடின் ஹரூன் கூறினார்.

மாநில சட்டமன்ற  கலைக்கப்பட்டதன் மூலம், மாநிலத்தின் புதிய நிர்வாகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான16 ஆவது மாநில தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது