அக்னி பரிசோதனையில் ஜொகூர் மாநில மா. இ.கா
Johor polls MIC acid test Indian voters Malaysia
Date: 06 June 2026
அரசியல் சோதனை: வரவிருக்கும் ஜொகூர் மாநிலத் GE16 தேர்தல், இந்திய சமூகத்தில் MIC இன்னும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதா என்பதை நிரூபிக்கும் "லிட்மஸ் டெஸ்ட்" ஆகும்.
வாக்காளர் பிரிவு: மூத்த இந்தியர்கள் BN-க்கு நெருக்கமாக இருக்க, இளம் மற்றும் நகர்ப்புற வாக்காளர்கள் பிரச்சினை சார்ந்த அரசியலை முன்னிறுத்தி PKR அல்லது புதிய கட்சிகளுக்கு வருகின்றனர்.

போட்டியிடும் தொகுதிகள்: MIC நான்கு தொகுதிகளில் போட்டியிடுகிறது — காஹாங், கெமெலா, தெங்காரோ, புகிட் பாரு. 2022-இல் மூன்றை வென்றது, ஆனால் புகிட் பாருவை PKR-க்கு 137 வாக்குகள் வித்தியாசத்தில்GE15 இழந்தது.
BN-இன் பங்கு: MIC, BN கூட்டணியின் ஒரு கூறு. உம்னோவின் வலிமை MIC-க்கு ஆதரவாக இருந்தாலும், வாக்காளர்கள் கட்சியின் திறமைகளை அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கலாம்.
புதிய சவால்கள்: ரஃபிசி ராம்லி மற்றும் நிக் நஸ்மி தலைமையிலான பார்டி பெர்சாம மலேசியா PKR-இன் இந்திய ஆதரவை குறைக்கக்கூடும்.

ஆதரவு காரணங்கள்: கல்வி, நலன், மத விவகாரங்களில் MIC எடுத்த முயற்சிகள், மேலும் வாழ்வாதாரச் செலவு, வேலைவாய்ப்பு, அடிப்படை வசதிகள் போன்ற பிரச்சினைகளில் BN அரசின் கவனம், இந்திய வாக்காளர்களிடம் நல்ல ஒத்திசைவைக் கண்டுள்ளது.
மொத்தத்தில், ஜொகூர் தேர்தல் MIC-க்கு அரசியல் நிரூபிக்கும் மேடை ஆகும்.
thank you fmt



ganapathy







\
