2027 பள்ளி பாடத்திட்டத்தில் பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
Education Minister Fadhlina Sidek announced that the teaching time for Reproductive and Sexual Health Education (PEERS) guidelines in the 2027 school curriculum will be increased.

Dated: 13.6.2025 Time: 3.55 pm By: Punithai Chandran
கோலாலம்பூர்,
வரும் 2027 பள்ளி பாடத்திட்ட அமலாக்கத்தில் இனப் பெருக்கம் சம்பந்தப்பட்ட பாலியல் கல்வி மற்றும் சமூக சுகாதாரக் கல்விக்கான வழிகாட்டுதல்கள் (PEERS), மற்றும் கற்பித்தல்களுக்கான பாட அட்டவணை நேரம் ஆகியவை அதிகரிக்கப்படவுள்ளது என்று கல்வி அமைச்சர் ஃபட்லினா சைட் தெரிவித்துள்ளார்.
நவம்பர் மாதம் தொடங்கப்பட்ட இந்த அட்டவணை தொகுதியானது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட விழிப்புணர்வை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், பாலியல் துன்புறுத்தல் பிரச்சினையை எதிர்கொள்ள, அனைத்து கல்வி அமைச்சின் கல்வி நிறுவனங்களும் இந்த வழிகாட்டுதல்களை, பின்பற்ற வேண்டுமென்றார்.
ஆபாசமான ஒழுக்கமற்ற உள்ளடக்கத்தைக் காட்டும் சமூக ஊடகப் பக்கங்கள் தடுக்கப்பட வேண்டும். இதனைப் பார்த்தவர்கள் புகார் அளிக்க வேண்டும். எனவே. குழந்தைகள் கல்வி கற்பதில் பெற்றோர்கள் முனைப்புடன் செயல்பட்டு, குழந்தைகளின் கண்ணியத்தைப் பாதுகாப்பது அவர்களின் பொறுப்பாகும் என்று ஃபட்லினா சைட் கூறினார்.
நன்றி. மலாய் மெயில்