மலேசியாவில் வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்

foreign recruitment agencies in Malaysia.

மலேசியாவில் வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்

Date :23 May 2025 News By: Punithai Chandran Time 4.55pm 

மலேசியாவில் வெளிநாட்டு ஆட்சேர்ப்பு நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் – டத்தோ லூர்துசாமி

வெளிநாட்டுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தும்போது, உள்ளுர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களை புறக்கணித்து செயல்படும் நிறுவனங்களின் நடைமுறை, சந்தையின் ஒருமைப்பாட்டினை குறைத்து மதிப்பிடுகிறது என்று மலாக்கா இந்திய வர்த்தக மற்றும் தொழில் முனைவோர் சங்கத்தின் துணைத் தலைவர் டத்தோ இக்னேஷியஸ் தூர்துசாமி தெரிவித்தார்.

 

இவ்வாறு, வெளிநாட்டு ஏஜென்சிகள் மூலம் வெளிநாட்டுத் தொழிலாளர்களை நேரடியாக அமர்த்தும்போது, அவர்களுக்கு போதுமான சட்டப் பாதுகாப்பை இழக்க நேரிடும். 

உள்ளூர் வேலை வாய்ப்பு நிறுவனங்களும் சட்டப்பூர்வமாக மனிதவள அமைச்சிடமிருந்து “உரிமம் சி”–யைப் பெற்றிருக்க வேண்டும். இத்தகைய உரிமங்களை வெளிநாட்டு ஏஜென்சிகள் கொண்டிருக்க வில்லை என்றார். 

மேலும், உள்ளூர் எஜென்சிகள் சட்டப்பூர்வமான உரிமங்களைப் பெறுவதற்கு வங்கி 250,000 ரிங்கிட்டை கடுமையான உத்தரவாதமாகக் கோருவதால், இது இந்தத் தொழிற்துறையில் நியாயமற்ற போட்டியை உருவாக்கிறது. ஆனால், வெளிநாட்டு ஏஜென்சிகளுக்கு இந்த விதிமுறை இல்லாமல் இருப்பதால் அவர்கள் இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்

எனவே, வெளிநாட்டு ஏஜென்சிகள் உள்நாட்டில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும், கட்டாய வரிவிதிப்பு தேவைகளுக்கு உட்பட்டு இணங்க வேண்டுமென்றும் லூர்துசாமி கேட்டுக் கொண்டார். 

www.myvelicham.com நன்றி. த ஸ்டார்.