மோட்டார் சைக்கிள் - கார்களுகான உரிமைகள் ஒரே (Module) அட்டை
Motorcycle - Car Rights Single Module Card

27 April 2025 News By:GanapathyKrishnasamy
ஈப்போ – மோட்டார் சைக்கிள் - கார்களுகான உரிமைகள்
ஒரே (Module) அட்டையில் ஒருங்கிணைக்கப்படும்.
எதிர்வரும் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு
மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களுக்கான உரிமைகள் இதற்கு முன்னர் தனித்தனியாக வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது KPP01 ஒரே (Module) அட்டையில் ஒருங்கிணைக்கப்படும் என்றும், இது 2025 ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சியூ ஃபூக் அறிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டம் செலவைச் சிக்கனப்படுத்துவதுடன், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான நேரத்தைக் குறைக்கும். இது JPJ-இன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்றும், MyJPJ பயன்பாட்டை உள்ளடக்கியிருப்பதால், ஓட்டுநர்கள் இணையம் வழி அபராதங்களைச் செலுத்துவதற்கும் வழி வகுக்கிறது.
JPJ- துறையை நவீனப்படுத்தும் வகையில், அண்மைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஒரு புதிய அதிகாரப்பூர்வ போர்டலை அறிமுகப்படுத்துகிறது.
JPJeBbid Mobile வழி, வாகன பதிவு எண் ஏலங்களுக்கான கூடுதல் பயனையும் JPJ அறிமுகப்படுத்துவதால், ஓட்டுநர்கள் தடையில்லா பயன்களைப் பெற முடியும் என்றும், இந்தப் போர்ட்டல் மூலம், வரும் ஏப்ரல் 23 சனிக்கிழமை முதல் இரவு 10 மணி வரை, ஐந்து நாட்களுக்கு JPJBbid mobile-லின் வழி ஏலங்கள் திறந்திருக்கும் என்றும், ஏப்ரல் 24-ஆம் தேதி இதன் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் லோக் அறிவித்தார்.
போக்குவரத்துத் துறையின் 79-ஆம் ஆண்டின் நிறைவை முன்னிட்டு இந்த புதிய சட்டம் நடைமுறைக்கு வருகிறது.
www.myvelicham.com Thank you Bernama