62 ஆண்டுகால சரித்திரத்தில் பினாங்கு மாநிலத்தில் ஒரு புதிய சரித்திரத்தை எஸ் சுந்தராஜூ ஏற்படுத்தினார்
Penang State Housing and Environment Committee Chairman S. Sundararaju announces a groundbreaking 5% discount for Indian Muslims under the new homeownership campaign, marking a historic first in the state's 62-year history.

Dated: 6.6.2025 Time: 11.55 am By: Punithai Chandran
ஜார்ஜ் டவுன்,
62 ஆண்டுகால சரித்திரத்தில் பினாங்கில் ஒரு புதிய சரித்திரத்தை ஏற்படுத்தினார் - எஸ் சுந்தராஜூ
பினாங்கு மாநில வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் எஸ். சுந்தராஜூ, புதிய வீட்டு உரிமை பிரச்சாரத்தின் கீழ், இந்திய முஸ்லிம்களுக்கு 5% சதவிகித தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்தத் தள்ளுபடி ஜூன் 1, 2025 முதல் மே 31, 2026 வரை பெற முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநில அரசு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மதானி வீட்டுரிமை பிரச்சாரத்தின் (MOC) கீழ், மாநிலம் ருமா முத்தியாரா Rumah MutiaraKu Type D (RMKu Type D) என்ற சிறப்பு வகைத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் உச்சவரம்பு விலை 400,000 ரிங்கிட் ஆகும். இது மாதம் 15,000 ரிங்கிட் வரை சம்பாதிக்கும் குடும்பங்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது. .
பினாங்கில் அறிமுகப்படுத்தப்படும் இந்த முயற்சியானது, பினாங்கில் விகிதாச்சார அடிப்படையில் வீட்டுரிமையை அதிகரிக்க முடியும். இது பினாங்கு வாழ் மக்களிடையே வீட்டுரிமையை உயர்த்தும் ஒரு பரந்த புதிய கொள்கையின் நடைமுறை ஆகும். இத்திட்டம் குறித்து, பினாங்கு வாழ் பொதுமக்கள், தொழிற்துறை நிபுணர்கள், கட்டிட வல்லுநர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துக்கள் பெறப்படும் என்றும், இந்த வீடுகள் திறந்த வெளிச் சந்தையில் வாங்க அனுமதிக்கப்படாது என்றும் எஸ். சுந்தராஜூ தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை நடந்த மாநில திட்டமிடல் குழுக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட இந்த கொள்கை, வீட்டுரிமையின் விகிதங்களை அதிகரிப்பதன் மூலம், புதிய திட்டங்களின் ஒப்புதலை ஊக்குவிக்க முடியும் என்றும், இதனால் மேலும் நிலையான மற்றும் போட்டித் தன்மையுள்ள சொத்து மேம்பாட்டுச் சூழலை ஏற்படுத்த முடியும் என்றும் கூறினார். மேலும், இதன்வழி மாநிலத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி ஒரு நேர்மறையான தோற்றத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் எஸ். சுந்தராஜூ கூறினார்.
நன்றி. எஃப்எம்டி