மலேசியாவில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு 20​% மட்டுமே!

Malaysia's public transport utilization currently stands at 20%, significantly below the 40% target outlined in the National Transport Policy 2019-2030.

மலேசியாவில் பொதுப் போக்குவரத்துப் பயன்பாடு 20​% மட்டுமே!

Dated: 6.6.2025      Time: 12.30 pm   By: Punithai Chandran

மலேசியாவில் 20​% சதவிகித்தனர் மட்டுமே பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். இது தேசியப் போக்குவரத்துக் கொள்கை 2019-2030 வரையிலான கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 40% இலக்கை விடக் குறைவாகவே உள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார். இந்த 40% இலக்கை அடைவதை உறுதி செய்வதே ​அமைச்சின் கொள்கையாகும் என்றார்.  

இதற்கிடையில், Road to Rail என்ற சாலைவழி  போக்குவரத்தை ரயில் வழிக்கு மாற்றும் முயற்சியானது தற்போது, கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொள்கலன்கள் ​மற்றும் பொருட்களின் போக்குவரத்திற்காக ரயில்களின் பயன்பாட்டை மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் இதன் மற்றுமொரு முக்கிய நோக்கமாகும். இதன்வழி சாலைகளைச் சார்ந்திருக்கும் நிலையும் குறையும் என்றும் லோக் தெரிவித்தார்.

நன்றி. எஃப்எம்டி