எலுமிச்சை நீரின் நன்மைகளும் - துணைப் பொருட்களும்
Discover the versatile benefits of lemon water, whether you prefer it hot or cold. Learn how it can aid in digestion, boost immunity, and potentially support weight loss.
Dated: 5.6.2025 Time: 5.50 pm
மொழியாக்கம்
எலுமிச்சைப் பழத்தை எவ்வாறு வேண்டுமென்றாலும் சாப்பிடலாம்.
சூடாக குடிக்க வேண்டுமா? குளிராக குடிக்க வேண்டுமா?
ஆனால், இது உங்களது தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது.
குளிர்ச்சியான நீரைக் குடிப்பது உடலின் உள்ள வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்யும். இது சிறியளவில் அல்லது கூடுதல் கலோரிகளை எரிக்கவும் வழிவகுக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது செரிமானத்தைத் தூண்டும் மற்றும் தொண்டை புண் போன்ற சுவாச அறிகுறிகளைப் போக்கும் என்று கூறப்படுகிறது.
காலையில் குளிர்ச்சியான எலுமிச்சை நீர் குடிப்பது, குறிப்பாக வெப்பமான மாதங்களில், உங்கள் உடலை சுறுசுறுப்பாக்குகிறது. அதே சமயம், மாலையில் அல்லது இரவு உணவிற்குப் பிறகு ஒரு கப் வெதுவெதுப்பான எலுமிச்சை நீர் அருந்தும்போது, அமைதியான முறையில் ஓய்வெடுக்க வழி வகுக்கிறது.
எலுமிச்சை நீர் உங்களுக்கு சற்றுக் புளிப்பாக இருந்தால் அல்லது கூடுதல் ஆரோக்கிய நன்மைகளைத் தர வேண்டும் என்று எண்ணினால், எலுமிச்சை நீரில் பின்வரும் பொருட்களைச் சேர்க்கலாம்:
ஆப்பிள் சைடர் வினிகர்
இந்த புளிப்பு திரவத்தை உங்கள் எலுமிச்சை நீரில் சேர்ப்பது அதன் இரத்த சர்க்கரை மற்றும் லிப்பிட் குறைக்கும் விளைவுகளால் எடை இழப்பை மேலும் ஆதரிக்கக்கூடும்.
மஞ்சள்
எலுமிச்சை நீரில் மஞ்சள் சேர்த்துக் குடிப்பதால், இரு மடங்கு ஆன்டிஆக்ஸிடன்ட்களின் அளவைப் பெற ஒரு சிறந்த வழியாகும், இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் - வீக்கத்தை எதிர்த்துப் போராடும் - செரிமானத்தை எளிதாக்கும்.
சியா விதைகள்
இந்த சிறிய விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளன. இது செரிமானம், இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவு ஆகியவற்றினைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனை எலுமிச்சை நீரில் கலக்கும்போது, மேலும் அதிகப்படியான பயன்களைத் தருகின்றன.
வெள்ளரி
வெள்ளரிக் காய்கள் அதிக நீர்ச்சத்து கொண்டவை, எனவே அவற்றை எலுமிச்சை நீரில் சேர்ப்பது கூடுதல் நீரேற்றத்தை வழங்குகிறது. வெள்ளரிக் காய்களில் வைட்டமின் K சத்தும் நிறைந்துள்ளது, இந்த பானம் சற்றே குளிர் தன்மையைக் கொண்டிருக்கும். இது எலும்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
இஞ்சி
எலுமிச்சை நீரில் இந்த இஞ்சியைச் சேர்ப்பது குமட்டலைப் போக்க உதவுகிறது -. செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உடலிலுள்ள இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தை குறைக்கச் செய்யலாம்.
தேன்
ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனை கலப்பதால், கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்புச் சக்தியை வழங்குகிறது.
கருப்பு மிளகு
எலுமிச்சை நீரில் கருப்பு மிளகு மற்றும் மஞ்சள் சேர்ப்பது உங்கள் உடல் நச்சுக்களைக் கொல்வதற்கு உதவும்,
முக்கிய குறிப்புகள்
எலுமிச்சை நீர் குடிப்பது, குறிப்பாக காலையில், உங்கள் எடைக் குறைக்க உதவும், அத்துடன் செரிமானத்தை மேம்படுத்துதல், சிறுநீரக கற்களைத் தடுத்தல், ஆற்றலை அதிகரித்தல் மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.
முக்கியக் குறிப்பு
எலுமிச்சை நீர் ஒரு சர்வ நிவாரணி அல்ல என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இருப்பினும், எந்தவொரு உணவு மாற்றங்களையும் செய்வதற்கு முன், குறிப்பாக உங்களுக்கு உடல்நலக் குறைவு இருந்தால் அல்லது மருந்துகள் எடுத்துக் கொண்டிருந்தால், ஒரு சுகாதார மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்றப் பின்னரே இந்தப் பானத்தை எடுத்துக் கொள்வது நல்லது.



ganapathy







\
