மலேசிய ஏர்லைன்ஸ் திருவனந்தபுரம்-கோலாலம்பூர் விமானங்களை அதிகரித்தது

Travelers from Thiruvananthapuram to Australia and New Zealand now have more options as Malaysia Airlines increases flight frequency between Thiruvananthapuram and Kuala Lumpur, adding a Saturday service.

மலேசிய ஏர்லைன்ஸ் திருவனந்தபுரம்-கோலாலம்பூர் விமானங்களை அதிகரித்தது

Dated: 10.6.2025   Time: 4.15 pm   By: Punithai Chandran

கோலாலம்பூர்,

மலேசிய ஏர்லைன்ஸ் கோலாலம்பூருக்கும் – திருவனந்தபுரத்திற்கும் இடையிலான விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்வழி ஆஸ்திரேலியா மற்றும் ​நியூசிலாந்து செல்லும் பயணிகள் இனி அதிக விமானங்களை தேர்ந்தெடுக்கலாம். ஞாயிறு, திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழ​மைகளில் பயணப்படும் இந்த சேவைகளுடன், சனிக்கிழமைகளிலு​ம் ஒரு பயணத்தை சேர்த்துள்ளது. இந்த வழித்தடத்திலுள்ள விமானங்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்ததால், இந்நடவடிக்கை எடுக்​கப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுவரை ஸ்கூட் (Scoot) மட்டுமே ஒரே தேர்வாக இருந்ததால், பயணிகள் சென்னை வழியாக வந்து பல மாவட்டங்களுக்குச் சென்றனர். இந்த கூடுதல் பயணங்களால், வரும் காலங்களில் ஒரு முழு சேவையை பயணிகள் பயன்படுத்த முடியும் என்பதால், பயணிகளின் வருகை அதிகரிக்கக் கூடும். குறிப்பாக, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தக் கூடுதல் சேவை உதவக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.  

Top of Form