இஞ்சி சிறந்த நிவாரணம்!

Ginger is the best relief!

இஞ்சி சிறந்த நிவாரணம்!
இஞ்சி சிறந்த நிவாரணம்!

09 May2025 News By :Ponrangan 

ஆம்! இஞ்சி பொதுவாக உடலாரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது, முக்கியமாக இருதயம் முதல், நுண்ணிய நரம்பு மண்டலம் வரையுள்ள அனைத்து உறுப்புக்களுக்கும் சிறந்த மருந்தாக - பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அழற்சி, குமட்டல், செரிமானம், கீழ்வாதம், அதிகக் கொழுப்பு மற்றும் நீரழிவு நோய் போன்றவற்றினைப் போக்கி, உடலுக்கு சிறந்த  ஆரோக்கியத்தைத் தரு​கிறது.

குமட்டல் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் குமட்டல், இருதயத்தில் கொழுப்பு, கிமோதெராஃபி சேர்மங்கள் ஆகியவற்றினை குறைப்பதில் இஞ்சி பெரும் பங்காற்றுகிறது. அழற்சி எதிர்ப்பு:

இஞ்சியில் இஞ்சிரோல் என்ற சேர்மங்கள் இருப்பதால், அழற்சி, கீழ்வாத, தசை வலி போன்றவற்றினைப் போக்குகிறது. இருதய கொழுப்பைக் குறைக்கும் இஞ்சி இருதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது. சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்

இஞ்சியில் இன்சுலின் உணர் திறன் இருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.  செரிமான ஆரோக்கியம் இஞ்சி செரிமானம், வீக்கம் மற்றம் வாயுத் தொலை​யை நீக்குகிறது. வலி நிவாரணி

ஆஸ்டியோ ஆர்த்ரிடிஸ், மாதவிடாய் வலி மற்றும் தலைவலி போன்றவற்றுக்கு வலி நிவாரணியாக செயல்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு பண்புகள்

இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், செல்களையும், சில நோய் மற்றும் சேத​ங்களின் ஆபத்தையும் குறைகின்றன. 

பொதுவாக, இஞ்சி பாதுகாப்பான ஒரு ​மூலிகை மருந்தாகப் பயன்படுத்தினாலும், கொழுப்பு மற்றும் நீரழிவு நோய்க்கான மருந்துகளுடன் உட்கொள்ளலாம். கர்ப்பிணிப் பெண்கள் சற்று கவனமுடன் இருப்பது அவசியம்! பக்க விளைவுகள்

ஆனால் அதிகள​வு உட்கொள்ளும்போது, நெஞ்செரிச்சல், வீக்கம் அல்லது வயிற்றுப் போக்கு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்கள் சற்று கவனமுடன் இருப்பது அவசியம்! தனிப்பட்ட ஆலோசனை

இஞ்சியை துணைப் பொருளாகப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் எந்தவிதமான நோயுள்ள சூழ்நிலையில் இருந்தாலும், அதிகளவு இஞ்சியை உட்கொள்வதற்கு முன்பதாக, ஒரு சுகாதார நிபுணரை அணுவது மிகவும் நல்லதாகும்.

WWW.myvelicham.com Face book