ஜொகூர் தாமான் யூ தமிழ்ப்பள்ளிக்கான நிலம் கிடைத்துள்ளது.
Land has been acquired for the Johor Taman U Tamil School.
Date: 22 jan 2026 News By: Tamil
தாமான் யுனிவர்சிட்டி மற்றும் சுற்றுவட்டாரங்கள் 1990-ம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழர்கள் அதிகமாக குடியிருந்த தோட்டப்புறங்களாக இருந்தன.
குறிப்பாக, புவன் ஹேங் தோட்டத்தில் 1953-ம் ஆண்டில் இருந்து இயங்கிக் கொண்டிருந்த தமிழ்ப்பள்ளி தோட்டத் துண்டாடலின் போது மீட்டெடுக்கப் படாமல் போய்விட்டது. 
அந்தத் தோட்டத்தில் வாழ்ந்த அதிகமான பாட்டாளி மக்கள் இன்று தாமான் யுனிவர்சிட்டியில் வீடு வாங்கி வசித்து வருகின்றனர். அதோடு, வெளியிடங்களில் இருந்தும் நாளுக்கு நாள் அதிகமான தமிழர்கள் இங்கு குடியேறியும் வருகின்றனர்.
தோட்ட மேம்பாட்டு திட்டங்களின் போது அங்கு வேலை செய்த உழைக்கும் வர்க்கத்தினர் தங்களின் அடிப்படை உரிமைகளை நிறைய இழந்து உள்ளனர். அதற்கான போராட்டமும் இன்று வரை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் தோட்டத் தமிழ்ப்பள்ளி.
தமிழ்ப் பள்ளிக்கான கோரிக்கையை நீண்ட நாட்களாக மாநிலக் கல்வி இலாக்கா, கல்வி அமைச்சு மற்றும் அரசியல் தலைவர்களிடம் முன் வைக்கப்பட்டது. இனியும் காலம் தாமதிக்காமல் மக்களின் அடிப்படை தேவையான இந்த கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டும் என்று சுற்றுவட்டார மக்கள் பெரிதும் எதிர்பார்த்ததுப்போல,
9 டிசம்பர் 2024, தாமான் யூ நிலவிவகார தொடர்பான சந்திப்புக் கூட்டம் தாமான் யூனிவர்சிட்டி தமிழ்ப்பள்ளி சிறப்பு பணிக்குழுவுடன் சமூக ஒற்றுமை, பாரம்பரியம், கலாச்சார துறை அலுவலகத்தில் நடைபெற்றது
.
இச்சந்திப்பில், தாமான் யூ தமிழ்ப்பள்ளிக்கான நிலம் பூலாய் உத்தாமா பகுதியில் கிடைத்துள்ள உறுதி கடித்தத்தை ஜொகூர் மாநில சமூக ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார துறை ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.இரவின் குமார் த/பெ கிருஷ்ணசாமி அவர்கள் தாமான் யூ தமிழ்ப்பள்ளி சிறப்பு பணிக்குழுத் தலைவர் திரு.சந்திர மோகன் அவர்களிடம் ஒப்படைத்தார்.
பூலாய் உத்தாமா நிலப்பட்டா தொடர்பான கடிதம் ஆட்சிக்குழு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அடுத்தக் கட்ட பணி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இச்சந்திப்புக் கூட்டத்தில் காரைநகர் நட்புறவு மையத்தின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்டனர்.
மேலும் தாமான் யூ தமிழ்ப்பள்ளி சிறப்பு பணிக்குழு உறுப்பினர்களும், மாநில கல்வி இலாகாவின் தமிழ்ப்பள்ளி மற்றும் பாலர் பள்ளிகளின் உதவி இயக்குனர் திரு.இரவிச்சந்திரன் த/பெ இராமசந்திரன் அவர்களும், மாடோஸ் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு.செல்வமணி அவர்களும், மாடோஸ் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக்குழுத் தலைவர் திருமதி.சந்திரா அவர்களும், இச்சந்திப்பில் கலந்துக்கொண்டர்.
தாமான் யுனிவர்சிட்டி தமிழ்ப்பள்ளி சிறப்பு நடவடிக்கைக்குழுத் தலைவர் திரு சந்திரமோகன் த/பெ சிதம்பரம் அவர்களின் தலைமையில்
கடந்த *10 ஆண்டுகளாக, தாமான் யூனிவர்சிட்டி பகுதியில் ஒரு **தமிழ்ப்பள்ளி நிறுவப்பட வேண்டும்* என்ற கோரிக்கையுடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட போராட்டம், இவ்வாண்டுடன் ஒரு *மகிழ்ச்சியான நிறைவைக்* கண்டுள்ளது.
அந்தப் போராட்டத்தின் பலனாக, *20.01.2026* அன்று இத்தமிழ்ப்பள்ளியை அமைப்பதற்கான *நிலப்பட்டா அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது*.
இச்சிறப்பான தருணத்தில், **ஜோகூர் மாநில முதல்வர்
Dato’ Onn Hafiz bin Ghazi** அவர்களுக்கு எமது *மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும்* தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேவேளை, **சமூக ஒற்றுமை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார துறை ஆட்சிக்குழு உறுப்பினர்
திரு. இரவின் குமார் த/பெ கிருஷ்ணசாமி அவர்கள்**, இன்று நடைபெற்ற இச்சந்திப்பில் கலந்துகொண்டு தமது ஆதரவையும் கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார்.
மேலும், இப்பள்ளிக் கட்டிடம் எழுப்புவதற்கான நிதி, அரசின் அடுத்த ஆண்டு நிதி திட்டத்தில் ஒதுக்குவதற்கு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுப்பதாக மான்புமிகு திரு இரவின் குமார் அவர்கள் உறுதி தெரிவித்தார்.
சொகூர் மாநிலத்தின் சில கட்சிகளின் ஒருங்கிணைப்போடு ஒற்றுமையுடன் செயல்பட்டதால் தான் இவ்வெற்றி நமக்கு விரைந்து கிடைத்துள்ளது என்று மான்புமிகு இரவின்குமார் அவர்கள் தெரிவித்தார். அதுமட்டுமின்றி சொகூர் மாநில தமிழ் மக்களின் ஆதரவும் இவ்வெற்றிக்கு இன்றியமையாதது என்பது குறிப்பிடத்தக்கது



ganapathy







\
