2026 ஜோகூர் வருகை ஆண்டு: RM42.48 பில்லியன் வருவாய் இலக்கு
Johor aims to generate RM42.48 billion in revenue through the "Johor Visit Year 2026" initiative. This target is based on an estimated average expenditure of RM3,500 per tourist.

Dated: 22.5.2025 Time: 5.00 pm By: Punithai Chandran
2026 ஜோகூர் வருகை ஆண்டு: RM42.48 பில்லியன் வருவாய் இலக்கு
ஜோகூர்,
எதிர்வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் “ஜோகூர் வருகை ஆண்டு” திட்டத்தில் 42.48 பில்லியன் வருவாய் ஈட்ட இலக்குக் கொண்டுள்ளதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் ஹாபிஸ் காஸி தெரிவித்தார்.
ஒரு சுற்றுலாப் பயணியின் செலவு 3,500 ரிங்கிட் என்ற கணக்கில் பார்த்தால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகளின் வருகையைக் கொண்டு இந்த வருமானத்தை ஈட்ட முடியும். இதற்காகத்தான் கடந்தாண்டு 116.35 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன என்று, ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
உயிரியல் பூங்கா, குனுங் லேடாங், தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா, ராயல் தாவரவியல் பூங்கா, அபூ பக்கர் ராயல் அருங்காட்சியகம், சுல்தான் அபூ பாக்கர் பாரம்பரிய வளாகம் மற்றும் ஹீரோஸ் அருங்காட்சியகம் ஆகியவை ஜோகூரின் மேம்பாட்டுத் திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
“ஜோகூர் வருகை ஆண்டு” ஜோகூர் வாழ் மக்களுக்கும் ஒரு சிறந்த வாழ்வாதாரத்தை வழங்குமென்றும் மந்திரி பெசார் தெரிவித்தார்.