மகாதீரின் ஜப்பான் பயண நிதிக்கு, மலேசியப் பிரதமர் அன்வார் அனுமதி
Malaysian Prime Minister Anwar Ibrahim has approved RM486,000 for former Prime Minister Dr. Mahathir Mohamad's trip to Japan. Despite their political rivalry.

Dated: 13.6.2025 Time: 11.50 am By: Punithai Chandran
மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமதின் ஜப்பான் பயணத்திற்காக RM486,000 நிதிக்கு அனுமதி வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் போட்டியாளராக இருந்தாலும்கூட, முன்னாள் பிரதமர்கள் இத்தகைய பயணங்களுக்கு நிதி கோர உரிமை உண்டு என்றும், இது தற்போதைய பிரதமரின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்றும் அன்வார் தெரிவித்தார்.
கடந்த மாதம் நடந்த நிக்கேய் மாநாட்டில் கலந்து கொள்ள மகாதீர் விடுத்த கோரிக்கையை அன்வார் ஏற்று, சுமார் ஏழு பேர் கொண்ட குழுவினருக்கான செலவை அங்கீகரித்தார். மகாதீரின் தொடர்ச்சியான விமர்சனங்கள் இருந்தபோதிலும், தான் நேர்மறையான அணுகுமுறையை எடுக்க விரும்புவதாலேயே, இதற்கு ஒப்புதல் அளித்ததாக அன்வார் தெரிவித்தார்.
1998ல் அன்வரை மகாதீர் பதவி நீக்கம் செய்தது, பின்னர் 2018ல் இணக்கமானது, மற்றும் மகாதீர் பிரதமரான வாக்குறுதியை மீறியது உள்ளிட்ட, அவர்களின் நீண்டகால அரசியல் வரலாற்றுக்கிடையிலும், இந்த அனுமதியானது ஒரு நல்லெண்ணத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
நன்றி. மலேசியக்கினி