Tamil: புக்கிட் ஜெம்போவில் சந்தேகநபர் சுட்டுக் கொலை – போலீசாருடன் துப்பாக்கி சண்டை
During an anti-crime operation in Bukit Jambul, Penang, a 35-year-old suspect exited a BMW and opened fire on police officers.

Dated: 17.5.2025 Time: 11.30 By: Punithai Chandran
பினாங்கு, பாயான் லெப்பாஸ், பினாங்கில் சந்தேக நபர் போலீசுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் உயிரிழப்பு
காவல் துறையினர் குற்றத் தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டிருந்தபோது, புக்கிட் ஜெம்போவில் சந்தேகத்துக்குரிய நபர் ஒருவர், BMW காரிலிருந்து வெளியே வந்து போலீசாரை பலமுறை சுடப்பட்ட பொழுது, பாதுகாப்பு காரணம் கருதி போலீசாரும் அவரை எதிர்த்துச் சுட்டதால், 35 வயதுடைய அந்நபர் சம்பவ இடத்திலேயே அவர் மரணடைந்தார் என்று பினாங்கு தலைமை போலீஸ் அதிகாரி டத்தோ ஹம்சா அஹ்மாட் தெரிவித்தார்.
அவரிடம் இருந்து FNP-45 துப்பாக்கி, 3 குண்டுகள், இரும்பு கம்பி, ஒரு பாராங் கத்தி, 1 ரோத்தான், 2.5 கிராம் கொண்ட போதைப் பொருள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இவர் ஏற்கனவே 19 குற்றங்கள் மற்றும் 15 போதைப் பொருள் குற்றங்களை புரிந்துள்ளவர் என்றும், இதனைத் தொடர்ந்து மேலும் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.