சாலை விரிவாக்கத்தின் காரணமாகவே பணியாளர் குடியிருப்பு மாற்றப்பட்டது என்று கூறினார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

Road expansion Datuk Seri M. Saravanan said the staff quarters were converted

சாலை விரிவாக்கத்தின் காரணமாகவே பணியாளர் குடியிருப்பு  மாற்றப்பட்டது என்று கூறினார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்
சாலை விரிவாக்கத்தின் காரணமாகவே பணியாளர் குடியிருப்பு  மாற்றப்பட்டது என்று கூறினார் டத்தோஸ்ரீ எம்.சரவணன்

Date :24 March 2025 News By:RM .Chandrann

ஜாலான் மஸ்ஜிட் இந்தியா,  தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறுவதை மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் மறுத்தார். 

 2008 ஆம் ஆண்டு ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியிலுள்ள தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் அதன் தற்போதைய இடத்திற்கு மாற்றப்பட்டதாக கூறுவதை மாண்புமிகு டத்தோஸ்ரீ எம். சரவணன் அவர்கள் மறுத்தார். 

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) அனுமதி வழங்கிய பிறகே கோயிலை தற்போதுள்ள இடத்திற்கு மாற்றப்பட்டது என்ற தவறான எண்ணம் சிலருக்கு இருப்பதாகத் தெரிவித்தார். 

தாம் 2009 முதல் 2013 வரை கூட்டரசுப் பிரதேச துணையமைச்சராக இருந்தபோது, கடந்த 2006ஆம் ஆண்டிலேயே டிபிகேஎல் விடுத்த வேண்டுகோளை அடுத்து  2008 ஆண்டு சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு வழி விடும் வகையில், கோயில் பணியாளர்களின் குடியிருப்புகள் மட்டுமே மாற்றப்படடன என்று அவர் சுட்டிக் காட்டினார்.  

சிலர் கூறுவதுபோல், 2008ஆம் ஆண்டு இந்தக் கோயில் இங்கு இடமாற்றம் செய்யப்படவில்லை. அது எப்போதுமே இங்கேயேதான் இருந்து வருகிறது என்று இன்று கோயில் வளாகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்  தெரிவித்தார். 

கோயில் சட்டவிரோதமாக கட்டப்பட்டது என்று கூறும் குற்றச்சாட்டுகளை மறுத்த டத்தோஸ்ரீ எம். சரவணன், அந்த கட்டமைப்பு செய்வதற்கு, டிபிகேஎல் அங்கீகரித்தற்கான  தெளிவானச் சான்றுகள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 இது சட்டவிரோதமாக இருந்திருந்தால், 2008ஆம் ஆண்டிலேயே டிபிகேஎல் அதை இடித்திருக்கலாம். அதற்குப் பதிலாக கோயிலின் நீர் விநியோகத்திற்காக புதியக் குழாய்களை அமைப்பதற்கு அனுமதியும் வழங்கியுள்ளனரே என்றார்.

 
    
மேலும், இது சட்டவிரோதமாக இருந்திருந்தால் டிபிகேஎல் அதை இடித்திருக்கலாம். அதற்குப் பதிலாக கோயிலின் நீர் விநியோகத்திற்காக புதிய குழய்களை அமைக்க அனுமதியும் வழங்கியுள்ளனர். கோயில் சட்டவிரோதகமாக இருந்தால், டிபிகேஎல் ஏன் இதையெல்லாம் செய்திருக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியதுடன், கடந்த 2008ஆம் ஆண்டு டிபிகேஎல் எழுதிய கடிதத்தின் நகலை அவர் செய்தியாளர்களிடம் எடுத்துக் காட்டினார். அந்த இடத்தில் மேற்கொள்ளப்பட்ட குழாய் வேலைகளுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. . 

பள்ளிவாசல் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் கோயில் ஆக்கிரமிப்புச் செய்ததாக வந்த வதந்திகளையும் அவர் முற்றாக நிராகரித்தார். அது டிபிகேஎல்-இன் அதிகார வரம்பிற்குள் இருந்தபோதே, இந்த நிலத்தின் நிலை “கலப்பு மேம்பாடு“ என்று வகைப்படுத்தப்பட்டது என்றும் கூறினார்.  

ஆனால், டிபிகேஎல்-லிடமிருந்து தேவையான அனைத்து ஒப்புதல்களையும் பெற்ற பிறகு கோயில் அதன் தற்போதைய இடத்தில் மாற்றப்பட்டதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கூறியிருக்கிறார்.

 

இதற்கு முன்னதாக, முன்னாள் மலேசிய இந்துச் சங்கத் தலைவர் திரு. ஏ. வைத்திலிங்கம் அவர்கள், கடந்த 2008-இல் தேவி ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் ஒருபோதும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று கூறி, அத்தகையக் கூற்றை நிராகரித்தார். அப்போதைய மேயரால் நியமிக்கப்பட்ட குழுவில் தானும் இருந்துள்ளதாக தெரிவித்தார். டிபிகேஎல் துணை இயக்குநர், ஜெனரல் தலைமையில் தாமும் தொடர்ச்சியான கூட்டங்களை நடத்தியதாகவும், அதனால், மாநகரில் கோயில்கள் தொடர்பான பலப் பிரச்சினைகள் தங்களால் தீர்க்க முடிந்தது என்றும் டத்தோ ஏ. வைத்திலிங்கம் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மேலும், சாலையை அகலப்படுத்துவதற்கு கோயிலை மாற்றுமாறு ஒரு மேம்பாட்டாளர் புகார் அளித்ததாகவும், கட்டுமானப் பணிகளைத் தொடர வழிவகுக்கும் வகையில் கோயில் இறுதியில், சுமார் 2 முதல் 3 அடி வரை மாற்றுவதற்கும் ஒப்புக் கொண்டது. பின்னர் கோயிலைப் புதுப்பிக்கும் திட்டத்தை டிபிகேஎல் அங்கீகரித்தது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேகமும் நடைபெற்றது. அந்த நிகழ்வில் தாமும் கலந்து கொண்டதாகக் கூறினார். . 
தாம் 1947ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பைத் தொடங்கிய காலத்திலிருந்தே இந்தக் கோயிலை இதே இடத்தில் தாம் பார்த்து வருவதாகவும், இதுதான் உண்மை என்றும் அவரது அறிக்கையில் கூறியுள்ளார். 
அப்போது துன் .ச.சாமிவேலு அவர்கள் பொதுப் பணித் துறை அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் இருந்தே இந்தக் கோயில் அங்கேயேதான் இருந்திருக்கிறது. என்றார்.