மலேசியா – தாய்லாந்து
ysia - ThailandMala
11.5.2025 by Punithai
பேங்காக், மே 10
மலேசியா – தாய்லாந்து நாடுகளுக்கிடையே
பரஸ்பர உறவு மற்றும் நலன்கள் குறித்து
விவாதிக்கப்படும்.
தாய்லாந்து பிரதமர் பேடோங்டர் ஷினவர்ராவும், மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் இவ்வாண்டு இறுதியில் சாடாவி – புக்கிட் காயு ஈத்தாம் எல்லைப் பகுதியில் அமைச்சரவை கூட்டத்தை நடத்துவதென ஒப்புக் கொண்டுள்ளதாகவும், இக்கூட்டம் புதிய சடாவோ – புக்கிட் காயு ஈத்தாம் சோதனைச் சவாடிகளை இணைக்கும் புதிய எல்லையின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட பின்னர், இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்றும் என பேடோங்டர் தமது X கணக்கில் பதிவிட்டுள்ளார். இதன்வழி இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவு மற்றும் நலன்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளன. .
தாய்லாந்தின் தெற்கு எல்லைப் பகுதிகளின் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருதல், இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளை கூட்டாக மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பது குறித்து இவ்விரு நாடுகளும் இணக்கம் கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதம் அலுவல் காரணமாக தாய்லாந்திற்கு பயணம் மேற்கொண்ட டத்தோஸ்ரீ அன்வார், ரந்தாவ் பாஞ்சாங் – சுங்கை கோலோக் பாலம் திட்டத்திற்கான கட்டுமான ஒப்பந்தம் (CA) தொடர்பாக ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கையெழுதிட்டதாகவும் பேடோங்டர் தெரிவித்தார்.
நன்றி. மலாய் மெயில்.