டத்தோஸ்ரீ அன்வார் ரஷ்யாவிற்கு நான்கு நாள் பயணம்
Dato Sri Anwar's four-day trip to Russia

15 May 2025 News By ; Punitha
.
அலுவலகக் காரணமாக சென்றுள்ள டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வுனுகோவோ-2 விமான நிலையத்திற்கு வந்தடைந்த பின்னர், மலேசியத் தூதர் டத்தோ சியோங் லூன் லாய்-யும், ரஷ்ய அரசின் சார்பாக, துணை வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி ருடென்கோ-வும் அதிகாரப்பூர்வமாக வரவேற்றனர்.
ரஷ்யப் பிரதமர் விளாடிமிர் புடினின் அழைப்பின் பேரில் வந்தடைந்த பிரதமர் இங்கு 16ஆம் தேதி வரை இருந்து, இவ்விரு நாடுகளுக்கிடையில் சமூக நல்லுறவுகளைப் பேணிக் காப்பதற்கு இவ்விரு பிரதமர்களும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். மேலும், பிரதமர் ரஷ்யாவில் வசிக்கும் மலேசியர்களுடனான சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொள்வதுடன், 20 ரஷ்ய தொழிற்துறைத் தலைவர்களுடன் ஒரு வட்டமேசை கலந்துரையாடலினும் பங்கேற்கவுள்ளார். பிரதமரின் உலகளாவிய அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கு ஆற்றிய பணிகளுக்காக, அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.
மேலும், கசானில் நடைபெறும் கூட்டத்தில், ரஷ்யா – இஸ்லாமிய உலகம் பற்றி ஒரு முக்கிய உரையாற்றவுள்ளார். இது இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியத் தளமாகவும் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
2024 ஆண்டின் நிலவரப்படி, ரஷ்யா மலேசியாவின் ஒன்பதாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி. பெர்னாமா