இந்து ஆலயங்களை இழிவுபடுத்துவதைத் தடுக்க முடியாத மதானி அரசாங்கமா?

Madani government that can't stop the desecration of Hindu temples?

இந்து ஆலயங்களை இழிவுபடுத்துவதைத் தடுக்க முடியாத மதானி அரசாங்கமா?

Date:28 Jan 2026 News By:  சந்திர சேகரன் 

இந்து வழிபாட்டுத் தலங்களைத் திட்டமிட்டு “ஹராம்” என இழிவுபடுத்தும் செயல்களைத் தடுக்க முடியாத சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு பாப்பா ராய்டு பதவி விலகுவதே சிறந்தது என சமூக ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.


பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மத நல்லிணக்கம், சகோதரத்துவம், சமத்துவம் மற்றும் ஒருமைப்பாட்டை வலியுறுத்தி வருவது உண்மை என்றால், இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.
மேலும், பல இனங்கள் வாழும் ஒரு நாட்டில் குறிப்பிட்ட ஒரு இனத்தின் மதத்தை இழிவுபடுத்தி பேசப்படும் போது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் அமைதியாக இருந்து அறிக்கைகள் மட்டும் வெளியிடுவது பயனற்றதாகும். ஆகையால், ஆட்சிக்குழு மற்றும் சட்டமன்ற உறுப்பினராக இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என, ஜோகூர் மாநில பெரிகாத்தான் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் உச்ச மன்ற உறுப்பினரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் வலியுறுத்தியுள்ளார்.