‘தமிழை மூச்சாகக் கொண்டவர்கள் தமிழர்கள்கொரியத் தமிழ்ச்சங்கம் சங்கத்திற்குப் பதக்கமும் பாராட்டும்!’

‘Tamils ​​who breathe Tamil’ Medal and appreciation to the Korean Tamil Association!

‘தமிழை மூச்சாகக் கொண்டவர்கள் தமிழர்கள்கொரியத் தமிழ்ச்சங்கம் சங்கத்திற்குப் பதக்கமும் பாராட்டும்!’

Date:28 Jan 2026 NewsBy:Ganapathy 

சான்றோர் பெருவிழாவில், பெருமைமிகுத் தருணம்: கொரியத் தமிழ்ச்சங்கம் சங்கத்திற்குப் பதக்கமும் பாராட்டும்! 

      ‘தமிழை மூச்சாகக் கொண்டவர்கள் தமிழர்கள்’  என்பதற்கு இணங்கத் தமிழ்ச் சங்கம் வைத்து, அத்தமிழ்ச் சங்கமூலமாகவும்/தமிழ் அமைப்புகள் மூலமாகவும், தனிச்சியாகவும் உலகம் முழுவதும் தமிழுக்கு மகுடம் சுட்டித் தமிழ் பணியாற்றிக் கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்களைச் சிறப்பிக்கும் வகையில் மதுரையில் " உலகத் தமிழ்ச் சங்கம்"  நடத்தியச்  " சான்றோர் பெருவிழா "  இந்த அண்டு  ஜனவரி 5 மற்றும் 6 தேதி, ஆக இரண்டு நாட்கள் நடைபெற்றது.

 அப்பெருவிழாவில், அயலகத் தமிழ் அமைப்புகள், வெளி மாநிலத் தமிழ் அமைப்புகள், தமிழகத் தமிழ் அமைப்புகள், உள்ளூர்த் தமிழ் அமைப்புகள், உள்ளீட்ட 60க்கும் மேற்பட்ட அமைப்புகளில் இருந்து சான்றோர் பெருமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
     " உலகத் தமிழ்ச் சங்கச் நடத்தியத்-  ‘தமிழ்ச் சங்கப் பதாகைப் பேரணி’, ‘சான்றோர் முற்றம்’" விழாவும் நடைபெற்றது, இன்நிகழ்வில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ‘உலகத் தமிழ்ச் சங்க’  உறுப்பினரான கொரியத் தமிழ்ச் சங்கமும் பங்குபெற்றது. " தமிழர்களின் கலாச்சாரம், மொழி, இலக்கியம், கல்வி நடவடிக்கைகளை மற்றும் சமூக நலன்கள் மூலம், தமிழர்களுக்கும் கொரியர்களுக்கும் இடையே வலுவான உறவை வளர்க்கவும், கொரியாவில் உள்ள தமிழர்களை ஒருங்கினைத்துத் தமிழைப் பெருமைப்படுத்தும் வகையில் செய்ல்பட்டுக்கொண்டிருக்கும் கொரியத் தமிழ்ச் சங்கத்தைச் சிறப்பித்துப் பாராட்டித், "   ’தமிழக அரசும்’, ‘மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும்’ விருதும், பதக்கமும் வழங்கியனர். 
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்த் திரு மு. பெ. சுவாமிநாதன், மாண்புகளுக்கு வணிகவரி மற்றும்  பதிவுத்துறை அமைச்சர்த் திரு. பி. மூர்த்தி, தவத்திரு குன்றக்குடித் திரு. பொன்னம்பல அடிகளார், சொல்வேந்தர்ச் சுகிசிவம், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் துணைத்தலைவர் இயக்குனர் முனைவர் இ.சா. பர்வீன் சுல்தானா அகியோர் முன்னிலையில். கொரிய தமிழ்ச் சங்கத்தின் சார்பாகக் கலை இலக்கிய முதன்மை ஒருங்கிணைப்பாளர்த் திரு.ஆகாஷ் விபின் அவர்களும், திருமதி.  நித்யஸ்ரீ முருகன் அவர்களும் பதக்கத்தினையும், விருதினையும் வாழ்த்துகளுடன் பெற்றுக்கொண்டனர்.     

“எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே!”
- பாரதிதாசன் கவிதைகள், 27, சங்கநாதம்
இந்தப் பாடல் வரிகள் போல், தமிழர்களின் ஒற்றுமை எவ்வளவு வலிமையானது என்பதையும், தமிழும் தமிழர்களும் என்றும் அழிவில்லாதவர்கள் என்பதையும் இன் நிகழ்வுகளின் மூலம் வலியுறுத்துகின்றன.

 தமிழக அரசிற்கும்’, ‘மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும்  தமிழனாய் எமது மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுக்களும்! 
கொரியத் தமிழ்ச் சங்கத்தின், தலைவர் முனைவர் செ. அரவிந்தராஜா இவ்வாறு கூறுகையில்- தென் கொரியாவில், எங்களது தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து அங்கீகரித்து வரும் ‘தமிழக அரசிற்கும்’, ‘மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்திற்கும் ‘எமது மனமார்ந்த நன்றிகளைத் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். 
அன்புடன், கொரிய தமிழ்ச் சங்கம்!