28 தமிழ் பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன்
School uniforms for students of 28 Tamil schools by Dr. R.A.
மு.வ.கலைமணி, பினாங்கு
பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஏற்பாட்டில், விரைவில் மாநிலத்திலுள்ள வசதிக்குறைந்த 28 தமிழ் பள்ளிகளின் மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றது.
தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் நிதி சுமையை குறைக்க இத்திட்டம் உதவும் என இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவரும், வாரிய கல்விப் பிரிவி தலைவருமான டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் கூறினார்.
அதேவேளையில் இந்நிகழ்விற்கு சிறப்பு வருகையாளராக வருகை தந்து தொடக்கிவைக்க, துணையமைச்சரும் தஞ்சோங் நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு லிம் ஊய் எங் அவர்கள் இசைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.



ganapathy







\
