இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக தைப்பூச வழிகாட்டி கருத்தரகம்

Thaipusam Workshop for Secondary School Students

இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக  தைப்பூச வழிகாட்டி கருத்தரகம்

Date:30 Jan 2026 NewsBy: Kalaimany Penang

நாடு தழுவிய அளவில் கோலாகலமாக கொண்டாடப்படும் தைப்பூச திருநாள் மாணவர்களிடையே பல முரண்பாடான தாக்கங்கள் நிலவி வருவதை தடுக்க பல இயக்கங்கள் பல வழிகாட்டிகளை நடத்தி வரும் வேளையில், பினாங்கு இந்து சங்கமும் தங்கள் சமயப்பணியாக, தைப்பூசத்தை  முன்னிட்டு சிம்பாங் அம்பாட் இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்காக ஒரு சிறிய வழிகாட்டி கருத்தரங்கு நடத்தப்பட்டது.

 

மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் கிடைக்கப்பெற்ற தைப்பூச திருவிழாவின் வழிகாட்டியின் துணையுடன் தமிழாசிரியர்கள் தைப்பூசத் திருநாளில் மாணவர்கள்  கடைபிடிக்க வேண்டிய சில வழிகாட்டிகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டனர்.  
இதன் வழி சம்பந்தப்பட்ட மாணவர்கள் விழிப்புணர்ச்சி அடைய வாய்ப்புண்டு என நம்பப்படுகிறது.

இவ்வரிய பணியை மேற்கொள்ளும் இந்து சங்கத்திற்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதாக  சிம்பாங் அம்பாட் இடைநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் உயர்திரு  டாக்டர் ஆசைதம்பி ராமையா  கூறினார்.

visit: www.myvelichamtv.com /  www.myvelicham.com