பெர்லி-தினா ஜோடி சாம்பியன் பட்டம் வெல்லும்

Berli-Thina pair will win the championship title

பெர்லி-தினா ஜோடி சாம்பியன் பட்டம் வெல்லும்

Date: 27 Feb 2026 News By:Jayarathan 

இங்கிலாந்தின் பீர்மிங்க்ஹாமில் மார்ச் 3 முதல் 8 வரை நடைபெறவுள்ள All England Open பேட்மிண்டன் போட்டியில், மலேசியாவின் முதன்மை பெண்கள் இரட்டையர் ஜோடியான பெர்லி-தினா சாம்பியன் பட்டம் வெல்வார்கள் என்ற உயர்ந்த நம்பிக்கையை தேசிய பெண்கள் இரட்டையர் தலைமை பயிற்சியாளர் ரொஸ்மான் ரசாக் வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், நாட்டின் பெண்கள் இரட்டையர் நம்பர் ஒன் ஜோடியாகவும், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் இடம் பெற்றவர்களாகவும் இருப்பதால், பெர்லி-தினா ஜோடி ஒவ்வொரு போட்டியிலும் பெரிய இலக்குடன் களமிறங்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக ஆல் இங்கிலாந்து  போன்ற உயரிய மதிப்புடைய போட்டிகளில் இந்த பொறுப்பு இன்னும் அதிகமாகும் என்றார்.

www.myvelicham.com /myvelichamtv.com share this news