அரசாங்க உயர்க் கல்வி கூடங்களே எனது முதல் தேர்வு.
Government higher education institutions is my first choice.
Date : 02 May 2025 News By: RM Chandran
மலேசிய நாட்டின் இந்திய மாணவர்கள் எஸ் பி எம் ( SPM ) மற்றும் எஸ் டி பி எம் ( STPM ) தேர்வை எழுதி முடித்து விட்டுக், கையில் தேர்வு முடிவு கிடைத்தவுடன், அடுத்த கட்ட நடவடிக்கையாக எந்தக் கல்லூரியில் அல்லது பல்கலைக் கழகத்தில் தங்களின் உயர்க் கல்வியைத் தொடரலாம் என்ற குழப்பத்தில் இருக்கும் இவ்வேளையில், இந்திய இளைஞர் சமுதாயத்திற்கு உதவும் நோக்கத்தில், இந்தப் பயனுள்ள நிகழ்ச்சியைக், கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பிறை, ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயம் ஏற்பாடு செய்து வருவதாக இவ்வாலயத்தின் கல்வி, சமயம் மற்றும் கலாச்சார நடவடிக்கைக் குழு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் முன்னாள் தலைமையாசிரியரும் மலேசிய தமிழ்ப்பள்ளிகள் மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் தேசியத் தலைவருமான, நனி சிறந்த ஆசிரியர் ( Tokoh Guru ) கரு இராஜமாணிக்கம் அவர்கள் தெரிவித்தார்.
எதிர்வரும் 11-5-2025 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 8 மணிக்குப், பட்டர்வெர்த் ஆனந்த பவன் உணவகத்தின் மேல் மாடியில் இந்நிகழ்ச்சி நடைபெறவிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
CUMIG என்று சொல்லக்கூடிய மலாயாப் பல்கலைக்கழக இந்தியப் பட்டதாரிகளின் / மாணவர்களின் பேராதரவோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகின்றது.
அரசு பல்கலைக் கழகம் மற்றும் கல்லூரிகளுக்கான நுழைவுத் தகுதி மற்றும் பதிவு தொடர்பான எல்லா விளக்கங்களும் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப் படும் என்றும் கூறப்பட்டது.
இந்தப் பயனுள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் காலைச் சிற்றுண்டி மற்றும் மதிய உணவு வழங்கப்படும்.
பினாங்கு மாநில இந்திய இளைஞர் சங்கத்தின் ( MIYC, PP) ஆதரவோடு இந்நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது .
மேலும் விவரங்களைப் பெற இராஜமாணிக்கம் ( தொ. பேசி எண் 016-5134023 ) மற்றும் நித்தியராஜா (தொ. பேசி எண் 014-6318183 ) தொடர்பு கொள்ளவும்.
www.myvelicham.com / Face book / Tik Tok / You Tube