டத்தோ டி. முருகையாபிரச்சினைக்கு தீர்வு கண்டார்

MIC Vice President Dato' T. Murugiah intervened and successfully resolved

டத்தோ டி. முருகையாபிரச்சினைக்கு தீர்வு கண்டார்

Dated : 26.5.2025 Time: 9.00 pm    By: Punithai Chandran 

தெலுக் இன்தான் நகர மன்றத்துடன் இணைந்து சகோதரர் தேவர் தொடர்பான பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டது

மஇகாவின் உதவித் தலைவர் (Vice President) எனும் நிலையில், மஇகா கம்பம் தெர்சுன் கிளைத் தலைவர் தேவருக்கும், தெலுக் இன்தான் நகர மன்றத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனையை, இன்று நேரில் சென்று தீர்த்து வைத்துள்ளதாக டத்தோ டி. முருகையா தெரிவித்தார்.

.

முன்னதாக, சகோதரர் தேவர் நகர மன்றத்தின் முன்பகுதி கண்ணாடிக் கதவை உடைத்ததாக கூறப்பட்ட சம்பவம் காரணமாக, அவருக்கு நகர மன்றம் கடையை வாடகைக்கு கொடுக்க மறுத்தது.

நகர மன்ற யாங் டி பெர்துவான் (YDP)  துவான் சைருல் அக்மல் பின் காசிம் அவர்களுடன் நடத்திய நேரடி கலந்துரையாடலில்,  நிலைமையை விளக்கி,  கடையை மீண்டும் தேவருக்கு வாடகைக்கு வழங்க YDP ஒப்புக் கொண்டார்.

மேலும், நகர மன்றம் வழங்கிய போலீஸ் புகாரையும் வாபஸ் பெற YDP-ஐ தாம் கேட்டுக் கொண்டதாகக் கூறிய டத்தோ டி. முருகையா, இதன் தொடர்பாக, விசாரணை அதிகாரியுடன் (IO) நேரடியாக பேச தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, தம்முடன் மஇகா  தெலுக் இன்தான் பகுதி தலைவர் திரு மனிகண்டன்,  துணைத் தலைவர் திரு செல்வராஜூ மற்றும் மஇகாவின்  நியமனத்தைப் பெற்ற நகர மன்ற உறுப்பினர் திரு ஸ்ரீ முருகன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த வழக்கு முழுமையாக தீர்க்கப்பட்டது.

மேலும், அவர் மஇகா  மக்களின் நலனுக்காக எப்போதும் உணர்வுப்பூர்வமாகச் செயல் படுகின்றது என்பதனை இதுக் காட்டுவதாக உள்ளது என்றார்.

www.myvelicham.com