AIMST பல்கலைக்கழகம் இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்டது!
AIMST UNIVERSITY IS CONSTRUCTED FOR INDIANS!
27 April 2025 News By: Rm Chandran
அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது
ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் வினோத் விளக்கம்.
ஏம்ஸ்ட் பல்கலைக்கழகம் இதுவரை
29 ஆயிரம் பட்டதாரிகளை உருவாக்கி இருக்கிறது.
இந்தப் பல்கலைக்கழகமானது மலேசிய இந்திய மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே தோற்றுவிக்கப்பட்டது.
உள்நாட்டு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காத இந்திய மாணவர்களில் பலர் வெளி நாடுகளில் கல்வி பயிலச் செல்லுவதில், பெற்றோர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கி வந்த காலகட்டத்தில், அவர்களின் சுமைகளைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நினைவில் வாழும் மஇகா தேசியத் தலைவர் துன் ச. சாமிவேலு அவர்களால் கடந்த 2002-ஆம் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் நிர்மாணிக்கப்பட்டது.
அதேபோன்று, 1983-ஆம் ஆண்டு சிரம்பானில் உள்ள டேஃப் கல்லூரியும் தோற்றம் கண்டது என்று எம்ஐஇடியின் ஏய்ம்ட்ஸ்' ஒருங்கிணைப்பு அதிகாரி விநோத் தெரிவித்தார்.
தனியார் பல்கலைக்கழகத்தோடு ஒப்பிடும்போது, ஏம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் கல்விக் கட்டணம் மிகக் குறைவானதாகும்.
www.myvelicham.com / face book / you tube / tik tok / linkedin /